தீபாவளி பண்டிகை எதிரொலி - கோவையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு: கோவில்கள், வணிக வளாகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு தீவிர சோதனை! 2022 கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பலத்த கண்காணிப்பு: மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்! நாளை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கூடி வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை மாநகரில் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில், அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் மாநகரின் பிரதான வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் (BDDS) மற்றும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். காவல் துறையின் மோப்ப நாய் (Sniffer Dogs) உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உடமைகள் ஆகியவை தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு முதல் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது பொருட்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
தீபாவளி பண்டிகை எதிரொலி - கோவையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு: கோவில்கள், வணிக வளாகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு தீவிர சோதனை! 2022 கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பலத்த கண்காணிப்பு: மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்! நாளை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம்
தேதி தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கூடி வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை மாநகரில் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில், அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் மாநகரின் பிரதான வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு
தடுப்புப் பிரிவினர் (BDDS) மற்றும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். காவல் துறையின் மோப்ப நாய் (Sniffer Dogs) உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உடமைகள் ஆகியவை தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு முதல் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது பொருட்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை எதிரொலி - கோவையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு: கோவில்கள், வணிக வளாகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு தீவிர சோதனை! 2022 கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பலத்த கண்காணிப்பு: மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்! நாளை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கூடி வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை மாநகரில் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில், அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் மாநகரின் பிரதான வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் (BDDS) மற்றும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். காவல் துறையின் மோப்ப நாய் (Sniffer Dogs) உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உடமைகள் ஆகியவை தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு முதல் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது பொருட்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.3
- கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.1
- புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.1
- கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1
- உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!! திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.1
- திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.3