கல்லுக் கூட்டம் பேரூராட்சியில் தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர் இதில் பெண் கவுன்சிலர் தனது 2 கை குழந்தைகளுடன் போரட்டத்தில் ஈடுபட்டார். கல்லுக்கூட்டம் பேரூராட்சி பகுதிகளில் ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப் பில் 8 சாலைகளை செப்ப னிடுவதற்காக கடந்த பிப்ரவரி 12ந் தேதி டெண்டர் கோரப்பட்டு கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி பணி உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் மார்ச் 3ந்தேதி பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து கோணங்காடு சரல் முதல் கோவில் விளை சாலை,காரியாவிளை முதல் கீழகரை,பருத்திவிளை பாலம் முதல் வட்டுக்கோட்டை வழி லெட்சுமி புரம் சானல் கரை,உடையார்ர்விளை சானல் முதல் கூத்தாவிளை வழி வெள்ளி பிள்ளையார் கோவில் சாலை காரியாவிளைமுதல் காரியாவிளை சர்ச் சாலை லெட்சுமி புரம் மெளனகுருசாமி மேற்கு குறுக்கு சாலை கருத்தளம் அமைத்தல் மற்றும் அருகன் கோட்டை முதல் ஊத்துக்குழி வரை உள்ள சாலையில் ஜல்லி மட்டும் பெயர்க்க பட்டுள்ளது. மற்ற 6 சாலைகளில் பணிகள் இது வரை தொடங்கப்பட வில்லை. ஒப்பந்த காலம் முடிந்து 5 மாதங்கள் ஆகியும் சாலையை செப்பனிடும் பணி இதுவரை தொடங்க வில்லை. இதனால் பேரூ ராட்சி மன்ற தலைவர் மனோகரசிங் தலைமையில், துணை தலைவர் கனக ராஜேஷ், கவுன்சிலர்கள் சாந்தி, கில்பர்ட் ஜேக்கப்,கிறிஸ்டி,இராஜம்மாள்,கீதாமலர், முருகன்,காண்ஸ்டன்ஜெகன்சிங், செல்வம், ராஜேஸ்வரி,மேகலா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் கவுன்சிலர் கீதாமலர் என் பவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளில் 2 ஒன்றரை வயது குழந்தை களுடன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.

- கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது.இதனை ஒட்டி கோவிலில் அம்மன் சன்னதி முன்பு பல்வேறு வகை பூக்களினால் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்த நிலையில் அத்தப் பூ கோலமிட்டனர்.பின்னர் கோவிலில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சித்தர் பீட தலைவர் சின்னத்தம்பி செய்து இருந்தார்.1
- ேநாய்கு தகுந்தாற்போல் கீரைகள் பழங்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கும்1
- நெல்லையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஜிசிசி என்ற பெயரில் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு அரசு போக்குவரத்துக் கழகமே இயக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மண்டல போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டை தாமிரபரணி பணிமனை அருகே அமைந்துள்ள நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் சிஐடியூ சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை 24 மணி நேரம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகமே மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.1
- தென்காசி மாவட்டம்கடையநல்லூரில் அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை தொழிலாளி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் வெளியீடு கடையநல்லூர் மக்கா நகர் பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் முகம்மது யூசுப் (32). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று முகம்மது யூசுப் மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், முகம்மது யூசுப் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முகம்மது யூசுப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முகம்மது யூசுப் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.1
- தூத்துக்குடி- உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவைகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் எனவும் அரசின் கஜானா காலியாக உள்ளதாக தெரிவித்த தமிழக வெற்றிக்கழக அரசு தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவே போதுமான நிதி இருப்பதால் தங்களுடைய உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தமிழக வெற்றிக் கழக அரசு மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி வருவதாக தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினார்கள் 1500 ரூபாய் உதவித்தொகை என்பது தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் வீட்டு வாடகை மளிகை பொருட்களின் விலை உயர்வு மின் கட்டண உயர்வு என பல்வேறு வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் தங்களுடைய உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.1
- கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்2
- கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு -பக்தர்கள் தரிசனம் நாகர்கோவிலில் அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி சிவபெருமானுக்கு பால் பன்னீர் சந்தனம் களபம் தயிர் மூலிகைச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பிரதோஷ விநாயகர் காளை வாகனத்தில் கோவிலை மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.1