Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை: பைக் மீது லாரி மோதி இளைஞர்கள் பலி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Reporter
புதுக்கோட்டை: பைக் மீது லாரி மோதி இளைஞர்கள் பலி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- 27.12.2025 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர் நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- Post by 10491
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.2
- *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1