Shuru
Apke Nagar Ki App…
சேலம் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் சேலம் மாவட்டம் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் போலீசார் விசாரணையில் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகள் வசித்ரா 22 சென்னையில் வேலை பார்த்து வருகிறார் மேலும் அதே பகுதியை சேர்ந்த மாது மகன் அரவிந்த் 24கார் ஓட்டுனராக உள்ளார் பள்ளியில் படிக்கும் போது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6ம் தேதி சென்னை பெரியமேடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு இன்று பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Selva
சேலம் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் சேலம் மாவட்டம் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் போலீசார் விசாரணையில் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகள் வசித்ரா 22 சென்னையில் வேலை பார்த்து வருகிறார் மேலும் அதே பகுதியை சேர்ந்த மாது மகன் அரவிந்த் 24கார் ஓட்டுனராக உள்ளார் பள்ளியில் படிக்கும் போது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6ம் தேதி சென்னை பெரியமேடு ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு இன்று பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.1
- மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிலிகுண்டு பகுதியில் உள்ள காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஒகேனக்கலில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியிலிருந்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.1
- 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்3
- அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- காரிமங்கலம் ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம் ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை ! ஜூலை..31, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .1
- ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கலில் நாளை ( 02.08.2026) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் மசாஜ் சென்டர், தொங்கும் பாலம், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.1