*தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.
*தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.
- கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்1
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அரசு பஸ்களுக்கு தமிழ்நாடு என பெயர் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடந்தது. இதில் நாதக கட்சியை சேர்ந்த வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டினர் இதில் ஈடுபட்ட 12 பேர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் கைது செய்தார்1
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- சென்னை கே கே நகர் மேற்கு2
- ஜன நாயகன் பேனர் அகற்றம் த வெ க தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் VG சரவணன் அவர்கள் ரசிகர்களுக்கு முதல் காட்சி இலவசமாக காண்பதற்கு ஏற்பாடு ஆகி இருந்த நிலையில் ஜனநாயகன் பேனரை அகற்றிய போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர்1
- *அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது1
- திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.1
- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO) புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.1