*அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தின் முன்னாள் பிஆர்ஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை* தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி, இவரது மகன் சூரிய நாராயணன் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார் இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராகப் (PRO) பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் சாந்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார் அப்போது செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணி புரிந்து வருவதால் தனக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலருடன் தொடர்பு இருப்பதாகவும் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் (APRO) பணி வாங்கி தருவதாக கூறியுள்ளார் இதனை நம்பிய சாந்தி தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பி தவணை முறையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரிடம் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது பின்னர் தன் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் என கேட்டபோது சண்முகசுந்தரம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சண்முகசுந்தரம் அரசு வேலை வாங்கி தருவதாக 4 நபர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் இதனை அறிந்த சாந்தி தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனி மாவட்ட முன்னாள் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சண்முகசுந்தரம் தற்போது சேலம் போக்குவரத்து கழக மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக (PRO) பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.1
- கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்1
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1
- நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.1
- கீழச்சுரண்டையில் ஊறுகாவல பெருமாள் கோவில் இருந்து மார்கழி மாத பஜனை வீதி உலா நிகழ்வில், இதில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள்.1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை மன்னர் கல்லூரியில் இன்று தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நான் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை, திருப்பரங்குன்றத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை தான் நீதிமன்றத்தில் கேட்டோம். நீதிபதிகள் பேய் கதை சொல்லும்போது அமைச்சர் சொல்லக் கூடாதா?, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவது அவருக்குத்தான் ஏமாற்றம்? என்றார்.1
- திண்டுக்கல் கிழக்கு: அமித்ஷாவா..? அவதூறுஷாவா..? திண்டுக்கல்லில் கொந்தளித்த முதல்வர்! திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அமித்ஷாவா அல்லது அவதூறு ஷாவா என சந்தேகம் வருகிறது" என்று பேசினார். உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியதாலும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என கூறியதாலும் கண்டனத்தை பதிவு செய்வதாக கூறினார்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- புதுகை ரயில்வே ரவுண்டானா அருகே கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அமைச்சர்கள் வழங்கினர். எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் அருணா, சேர்மன் திலகவதி செந்தில், து.செ. லியாகத், எம்.எல்.ஏ முத்துராஜா உள்ளிட்டோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெள்ளம், கரும்பு, ₹3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.1