Shuru
Apke Nagar Ki App…
குளத்தூரில் திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் தீவிரவாக்கு சேகரிப்பு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் போ.சுப்பையன் முன்னிலையில் இன்று திமுக சட்டமன்ற வேட்பாளர் வீராசாமிநாதன் குளத்தூர் ஊராட்சி RVS நகர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் வீராசாமி நாதனுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
Farmers joint Liability Group

More news from தமிழ்நாடு and nearby areas
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1

- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- Post by பெரியசாமி1
- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1