வே. தங்கபாண்டியன் 29-வது நினைவு நாள்: மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி திமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே. தங்கபாண்டியன் அவர்களின் 29-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள வே. தங்கபாண்டியன் நினைவிடத்தில் அவரது மகனும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், சேடப்பட்டி மணிமாறன், அப்துல் வஹாப், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், செங்கை மாறன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வே. தங்கபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வே. தங்கபாண்டியன் 29-வது நினைவு நாள்: மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி திமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே. தங்கபாண்டியன் அவர்களின் 29-வது நினைவு நாள் இன்று
அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள வே. தங்கபாண்டியன் நினைவிடத்தில் அவரது மகனும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் அவரது மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான
தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம்,
சேடப்பட்டி மணிமாறன், அப்துல் வஹாப், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், செங்கை மாறன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வே. தங்கபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்1
- கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.1
- ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்1
- ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்1
- அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் *விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' கண்டன ஆர்ப்பாட்டம்!* விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' சார்பில் அரசு மருத்துவமனை முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவைக்கேற்ப தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும். விபத்துகளில் காயமடைபவர்களுக்கு விரைவாகத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் 'தலைக்காய சிகிச்சை பிரிவை' உடனே தொடங்க வேண்டும். மருத்துவமனை உணவகத்தில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளின் அதிகப்படியான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு' அமைப்பின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்1
- *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* *மதுரை வாடிப்பட்டியருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்* - *போலீசார் விசிகவினரிடையே* *தள்ளுமுள்ளு* - *விசிக நிர்வாகியை சட்டை கிழிந்த நிலையில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விசிகவினர் அப்பகுதியில் கொடி மரம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிக கொடி கம்பம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டதாகவும், இதற்கு விசிக மற்றும் பொது மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு கொடி மரங்களையும் அகற்றுவது என வருவாய்த்துறையினர் முடிவு செய்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கொடி மரம் அகற்ற வந்த நிலையில் கொடி மரத்தை அகற்ற அப்பகுதி விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விசிகவினர் போலீசாரிடமிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விசிக நிர்வாகியை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்ல முயன்ற போது அவரின் சட்டை கிழிந்ததாக கூறப்படுகிறது, இதில் போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார், பின்னர் கொடிமரம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர் பொது மக்கள் என 94 பேரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து ஆண்டிபட்டி பங்களா பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்துள்ளனர். தவெக கூட்டணி கட்சியான விசிக கொடி கம்பம் அகற்றுவது தொடர்பாக விசிக போலீசாரிடமிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1