logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2 hrs ago
user_குமார்
குமார்
Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
2 hrs ago

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்! விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    1
    வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்!
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வத்திராயிருப்பு வட்டத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பிளவக்கல் அணையின் தற்போதைய நிலை, நீர்த்தேக்கப் பகுதி மற்றும் அணையின் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டார். மேலும், மீன் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மீன் வளர்ப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் முக்கிய நோக்கமான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    1
    திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *!
*ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு*

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    1
    வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...

வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...
வடகிழக்கு பருவமழை  துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில்  மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் 
சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    1
    நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    30 min ago
  • திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடிய பெட்டிகளுடன் இன்று திருச்செந்தூர் வந்தடைந்தது. பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது. சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயங்கும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20605/20606) ரயிலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பழைய ICF பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்திலான LHB (Linke Hofmann Busch) பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடனான ரயில் சேவை அக்டோபர் 20, நேற்று சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கியது இன்று திருச்செந்தூரிலிருந்தும் வழக்கமான வழக்கமான இயக்கத்தை தொடங்க உள்ளது. புதிய LHB பெட்டிகளில் ஏசி முதல் வகுப்பு 1 பெட்டி ஏசி இரண்டு அடுக்கு 2 பெட்டிகள் ஏசி மூன்று அடுக்கு 3 பெட்டிகள் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (Sleeper Class): 9 பெட்டிகள் பொது இரண்டாம் வகுப்பு 4 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 1 பெட்டி சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 பெட்டி 23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திருச்செந்தூர். புதிய LHB பெட்டிகளின் விபத்து நேரிட்டாலும் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மேல் ஏறி கவிழாத வகையில் அதிநவீன ஆன்டி-கிளைம்பிங் தொழில்நுட்பத்துடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிர்வற்ற பயணம் ரயில் பயணிக்கும் போது ஏற்படும் குலுக்கல்கள் மற்றும் சத்தங்கள் மிகவும் குறைவாக இருக்கும். இந்த பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை. பயோ-டாய்லெட் வசதி, பெரிய ஜன்னல்கள் மற்றும் சிறந்த உட்புற வடிவமைப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இன்று திருச்செந்தூர் வந்த இந்த ரயில் பெட்டிகள் இன்று மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்கிறது. ரயில் பயணத்தில் புதுவித அனுபவம் இருந்ததாகவும் குளிர்சாதன வசதி கழிப்பிட வசதி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
    1
    திருச்செந்தூர் 
செந்தூர் எக்ஸ்பிரஸ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடிய பெட்டிகளுடன் இன்று திருச்செந்தூர் வந்தடைந்தது. பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயங்கும் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20605/20606) ரயிலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பழைய ICF பெட்டிகளுக்குப் பதிலாக அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்திலான LHB (Linke Hofmann Busch) பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. 
இந்த புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடனான ரயில் சேவை அக்டோபர் 20, நேற்று சென்னை எழும்பூரிலிருந்து தொடங்கியது இன்று திருச்செந்தூரிலிருந்தும் வழக்கமான வழக்கமான இயக்கத்தை தொடங்க உள்ளது. 
புதிய LHB பெட்டிகளில் ஏசி முதல் வகுப்பு 1 பெட்டி
ஏசி இரண்டு அடுக்கு 2 பெட்டிகள்
ஏசி மூன்று அடுக்கு 3 பெட்டிகள்
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (Sleeper Class): 9 பெட்டிகள்
பொது இரண்டாம் வகுப்பு 4 பெட்டிகள், 
மாற்றுத்திறனாளிகளுக்கான  1 பெட்டி 
சரக்கு மற்றும் பிரேக் வேன் 1 பெட்டி 
23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திருச்செந்தூர்.  புதிய LHB பெட்டிகளின் விபத்து நேரிட்டாலும் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மேல் ஏறி கவிழாத வகையில் அதிநவீன ஆன்டி-கிளைம்பிங் தொழில்நுட்பத்துடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 
அதிர்வற்ற பயணம்
ரயில் பயணிக்கும் போது ஏற்படும் குலுக்கல்கள் மற்றும் சத்தங்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
இந்த பெட்டிகள் மணிக்கு 160 கி.மீ வேகம் வரை தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை.
பயோ-டாய்லெட் வசதி, பெரிய ஜன்னல்கள் மற்றும் சிறந்த உட்புற வடிவமைப்பு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இன்று திருச்செந்தூர் வந்த இந்த ரயில் பெட்டிகள் இன்று மாலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்கிறது. ரயில் பயணத்தில் புதுவித அனுபவம் இருந்ததாகவும் குளிர்சாதன வசதி கழிப்பிட வசதி மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,  தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் 
பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் 
இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது 
உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் 
கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் 
நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டைத் தடுக்க பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு! விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, அரசு பேருந்துகளில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம், நகை மற்றும் செல்போன் திருட்டுகள் நடைபெறாமல் தடுக்க, பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
    1
    காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டைத் தடுக்க பொதுமக்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, அரசு பேருந்துகளில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பண்டிகைக் கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம், நகை மற்றும் செல்போன் திருட்டுகள் நடைபெறாமல் தடுக்க, பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.