வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
- வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...1
- கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.1
- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தொடர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மூன்றாவதுநாளாக தொடர் தடை அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- E.மகேஷ்வரன் தேனி 20.10.2026 Visual: jaya district Vis Group ல் உள்ளது. ஆன்மீக வழியில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் அமைக்க பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றினைய வேண்டும், கோயில்களில் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சி அமைய பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் அம்மா ஆட்சி அமையும்: ஆன்மீக வழியை திமுக ஏற்றால் அதிமுக திமுக கூட்டணி வைக்க சம்மதிக்கலாம் என சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் பேட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில் இயல் இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தனிய தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளாரும், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர். குன்றக்குடி அடிகளாருக்கும். தருமபுரம் ஆதீனத்திற்கும் ருத்ர பூஷன் விருதும் நினைவு பரிசையும் சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், கிறித்தவ இஸ்லாமியர்களை போல் இந்து மயானங்களை புனிதமாக கருதி தூய்மைபடுத்தி வருவதாகவும், குடிநீர் கழிப்பறை வசதி செய்து வருவதாகவும், இதுபோல அனைத்து மாநில அரசுகளும் இந்து மயானங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார மேலும், ஆன்மீக பாதையிலும் செல்லும் அஇஅதிமுக ஆட்சியில் திருக்கோயில்களில் மதிய அன்னதான திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா என புகழாரம் சூட்டினார். ஆன்மீக பாதையிலும் செல்லும் செல்லும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டால் ஆன்மீக பாதையை திமுக விரும்பினால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தோல்விகளை கண்டு தேய்ந்து வரும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்தால் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றார் பேட்டி:திரு, N.சிவக்குமார் என்ற ருத்ரபாபு : நிறுவன தலைவர். சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை1
- தென்காசி மாவட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரை உள்ள 3 கிமீ பகுதியில் வருவாய் துறை வரைபட ஆவணத்தின் அடிப்படையில் விரிவு படுத்த கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் 900 பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இல்லாமல் மனுவினை மட்டும் வழங்க போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து நிர்வாகிகள் மனுவினை வழங்கினர்1
- குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காப்புக் கட்டி காளி அம்மன் சிவன் பார்வதி குரங்கு குறவன் குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து தசரா குழுவாகவும் தனியாகவும் சென்று காணிக்கை பெற்று வந்த பக்தர்கள் இன்று கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதற்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பட வசதி செய்யப்பட்டுள்ளது கூட்ட நெரிசலில் காணாமால் போகும் குழந்தைகள் அல்லது நபர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் உதவி மையத்தில் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் சுமார் 50 காவல், உதவி மையங்கள் 7 நகரும் சிசிடிவி கேமரா வாகனங்கள் 300க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் 3 முக்கிய சாலைகளில் ANPR கேமராக்கள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு உள்ளது குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு திரை அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் மூலம் கண்காணிப்பட்டு வருகின்றன. மேலும் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு, 5 முக அடையாள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குலசேகரப்பட்டினத்திற்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 120 தீயணைப்பு வீரர்கள் மரைன் போலீசார் மற்றும் மீனவர்கள் ஆகியோர் பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் புனித நீராட பணியில் ஈடுபட்டுள்ளனர். 23 இடங்களில் தற்காலிக வாகனம் பேருந்து நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் ரோல் கேமரா மூலம் படம் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தசரா நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் வைத்து வெயில் சமூகத்தில் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உலோகத்தில் ஆன ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஜாதி அடையாளப்படுத்தக்கூடிய உடைகள், கொடிகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் நையாண்டி மேளம் நாதஸ்வர இசைக்கருவிகளை தவிர்த்து வேறு இசைக்கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.1