logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வழக்குகளை அறுக்கும் காஞ்சிபுரம் வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில்  சனி மகா பிரதோஷம் முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்  ------------------------- காஞ்சிபுரம் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  முன்னிலையில் நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.  ​வழக்குகளில் வெற்றி பெறவும், சிக்கல்கள் தீரவும் வழிபடப்படும் இந்தத் தலத்தில், சனி மகா பிரதோஷம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  நந்தியம் பெருமானுக்கும், மூலவர் வழக்கு அறுத்தீஸ்வரருக்கும் பெரிய பெரிய பாத்திரத்திரங்களில் பால், சந்தனம் ,பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.அபிஷேகத்திற்குப் பிறகு சுவாமிக்குச் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. சனி மகா பிரதோஷத்தன்று ஈசனை தரிசிப்பது, ஐந்து வருடங்கள் தினசரி சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக வழக்கு அறுத்தீஸ்வரர் போன்ற சக்திவாய்ந்த தலங்களில் இது இன்னும் விசேஷமானது. கூடி இருந்த சிவ பக்தர்கள் நந்தியம் பெருமானின் பாடல்களை துதித்த வண்ணம் இருக்க, ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு நந்தியம் பெருமானின் சரணங்களை கூறியவாறு அபிஷேகத்தினை  கண்டு வணங்கினர்.  "சிவபெருமானே மகாதேவா" " நந்தியும் பெருமானே மகாதேவா " உள்ளிட்ட நந்தியம் பெருமானின் மந்திரங்களை பாடியவாறு அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

on 14 February
user_E.LAKSHMI KANTHAN
E.LAKSHMI KANTHAN
பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
on 14 February

வழக்குகளை அறுக்கும் காஞ்சிபுரம் வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில்  சனி மகா பிரதோஷம் முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்  ------------------------- காஞ்சிபுரம் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  முன்னிலையில் நந்தியம் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.  ​வழக்குகளில் வெற்றி பெறவும், சிக்கல்கள் தீரவும் வழிபடப்படும் இந்தத் தலத்தில், சனி மகா பிரதோஷம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  நந்தியம் பெருமானுக்கும், மூலவர் வழக்கு அறுத்தீஸ்வரருக்கும் பெரிய பெரிய பாத்திரத்திரங்களில் பால், சந்தனம் ,பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.அபிஷேகத்திற்குப் பிறகு சுவாமிக்குச் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டது. சனி மகா பிரதோஷத்தன்று ஈசனை தரிசிப்பது, ஐந்து வருடங்கள் தினசரி சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக வழக்கு அறுத்தீஸ்வரர் போன்ற சக்திவாய்ந்த தலங்களில் இது இன்னும் விசேஷமானது. கூடி இருந்த சிவ பக்தர்கள் நந்தியம் பெருமானின் பாடல்களை துதித்த வண்ணம் இருக்க, ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு நந்தியம் பெருமானின் சரணங்களை கூறியவாறு அபிஷேகத்தினை  கண்டு வணங்கினர்.  "சிவபெருமானே மகாதேவா" " நந்தியும் பெருமானே மகாதேவா " உள்ளிட்ட நந்தியம் பெருமானின் மந்திரங்களை பாடியவாறு அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    1
    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
    1
    சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட 44வது வார்டில் ஜீப் வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக சென்று திமுக வேட்பாளர் வேட்பாளர் ஆர்.டி.சேகர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளருக்கு சால்வைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மாவட்ட பகுதி வட்ட மற்றும் மதசார்பற்ற முற்போர்க்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Naduvan Kural TV
    1
    Post by Naduvan Kural TV
    user_Naduvan Kural TV
    Naduvan Kural TV
    திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    2
    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_OREDESAM REPORTER
    OREDESAM REPORTER
    Local News Reporter திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    1
    செஞ்சி:
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருப்பத்தூர், ஏப். 3: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர். மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    1
    திருப்பத்தூர், ஏப். 3:
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர்.
மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.