logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கல்வராயன் மலையில் – திடீரென பெய்த கனமழையால் வீடுசேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

3 hrs ago
user_M.P.Palani Samy
M.P.Palani Samy
கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
3 hrs ago

கல்வராயன் மலையில் – திடீரென பெய்த கனமழையால் வீடுசேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • *அரை அடி இடத்திற்காக தொடரும் பிரச்சினை!ஆர்மி குடும்பத்தை அழேக்கா பந்தாடிய நபர்! சிறுமி என்றும் பாராமல் வண்டி ஏற்றி கொலை முயற்சி! 10க்கும் மேற்பட்டோர் ஆர்மி குடும்பத்தை சூறை! பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த குமார் (சுபேதார்) ராணுவத்தில் பெங்களூரில் பணியாற்றி வருகிறார் இவர் ரெட்டியூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் குமாரின் மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா மற்றும் தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரின் அரை அடி இடத்தை அருகில் உள்ள சிவராமன் என்பவர் சேர்த்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிவராமன் குடும்பத்தினர் குமார் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போன்று நேற்று காலை சிவ சக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் இருந்தபோது கோலம் போடும் தகராறில் மூதாட்டியை தாக்கி உள்ளனர். தேவனை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே போன்று மாலை நேரத்தில் சிவசக்தியின் தந்தையான மேகநாதன் (65) மற்றும் சிவசக்தி அவரின் பிள்ளைகள் என அனைவரையும் சிவராமன் குடும்பத்தினர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறு குழந்தைகள் என்றும் பாராமல் சிவராமன் குடும்பத்தினரில் ஒருவர் டூ வீலர் வண்டியை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்தார் பின்னர் இந்த சிறுமியை கண்ணம் மற்றும் வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவசக்தி ‌குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். அதற்குள் குமார் குடும்பத்தினரை சிவராமன் குடும்பத்தினர் தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர். பின்னர் அடி வாங்கிய சிவசக்தி குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிவ சக்தி தனது பெண்ணை சிவராமன் குடும்பத்தினர் தகாத இடங்களில் கை வைத்து தாக்கியதாகவும் மேலும் காலையிலே அடிதடி பிரச்சினை நடக்கும்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்காது எனவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் எனவும் சிவசக்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் ஒரு ஆர்மி குடும்பத்தினரை மற்றொரு ஆர்மி குடும்பத்தினர் தாக்கும் பத பதக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
    1
    *அரை அடி இடத்திற்காக  தொடரும் பிரச்சினை!ஆர்மி குடும்பத்தை அழேக்கா பந்தாடிய நபர்! சிறுமி என்றும் பாராமல் வண்டி ஏற்றி கொலை முயற்சி! 10க்கும் மேற்பட்டோர் ஆர்மி குடும்பத்தை சூறை! பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு*
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த குமார் (சுபேதார்) ராணுவத்தில் பெங்களூரில்  பணியாற்றி வருகிறார் 
இவர்  ரெட்டியூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் குமாரின் மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா மற்றும் தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவரின் அரை அடி இடத்தை அருகில் உள்ள சிவராமன் என்பவர் சேர்த்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 
இதன் காரணமாக இருவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் சிவராமன் குடும்பத்தினர் குமார் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். 
அதே போன்று நேற்று காலை சிவ சக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் இருந்தபோது கோலம் போடும் தகராறில் மூதாட்டியை தாக்கி உள்ளனர். 
தேவனை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 
அதே போன்று மாலை நேரத்தில் சிவசக்தியின் தந்தையான மேகநாதன் (65) மற்றும் சிவசக்தி அவரின் பிள்ளைகள் என அனைவரையும் சிவராமன் குடும்பத்தினர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 
சிறு குழந்தைகள் என்றும் பாராமல் சிவராமன் குடும்பத்தினரில் ஒருவர் டூ வீலர் வண்டியை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்தார் பின்னர் இந்த சிறுமியை கண்ணம் மற்றும் வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கினர்.
இதனால் நிலைகுலைந்த சிவசக்தி ‌குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். 
அதற்குள் குமார் குடும்பத்தினரை சிவராமன் குடும்பத்தினர் தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர். 
பின்னர் அடி வாங்கிய சிவசக்தி குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சிவ சக்தி தனது பெண்ணை சிவராமன் குடும்பத்தினர் தகாத இடங்களில் கை வைத்து தாக்கியதாகவும்
மேலும் காலையிலே அடிதடி பிரச்சினை நடக்கும்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்காது எனவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் எனவும் சிவசக்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். 
மேலும் ஒரு ஆர்மி குடும்பத்தினரை மற்றொரு ஆர்மி குடும்பத்தினர் தாக்கும் பத பதக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    4 hrs ago
  • குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.
    1
    குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று  நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    12 hrs ago
  • திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    3
    திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. 
இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார்.
இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது.
மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது.  விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் 
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி  பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து  சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள்
வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.
அதனை  தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. 
விழாவில்  வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால் பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால்  பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    35 min ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில்  அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து  தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை  பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில்  அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து  தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை  பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..
    1
    திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது
முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026)  காப்பு கட்டுதல் நடந்தது
அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு  காவேரிநகர்  அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது
அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.
2 ம் தேதியான  மாலை அன்னதானமும் இரவு 6.00  உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும்  கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
3ம் தேதி  காலை மேல் மஞ்சள் நீராட்டு
விழாவும்  8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது  ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக  நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.