Shuru
Apke Nagar Ki App…
ஆம்பூர் உமர் ரோட்டில் இன்று மே.2 போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால் பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Yuvaraj Yuvaraj
ஆம்பூர் உமர் ரோட்டில் இன்று மே.2 போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால் பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால் பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை1
- திருப்பத்தூர் மாவட்டம் .* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 115-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு நாட்றம்பள்ளி சுற்றியுள்ள பச்சூர், வெலக்கல் நத்தம், பந்தாரப்பள்ளி, அக்ரஹாரம்,நாயனசெருவு, புதுப்பேட்டை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் வைத்தும் கோழி,ஆடு, பலி கொடுத்தும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் இழுத்தல்,கரகம், சடல் குத்தும் நிகழ்ச்சி,வானவேடிக்கை உள்ளிட்ட இந்நிகழ்ச்சிகளும் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் பெயரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு பால்குடம் சித்ரா பொளர்ணமி 108 பால்குட பெருவிழா. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மேல தாளங்களுடன் , அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து அக்னி சட்டி ஏந்தி சிறப்பு வீதி உலா நடைபெற்று தீப தூப ஆராதனை செய்து பக்தர்களும் பொதுமக்களும் வழிபட்டனர். மேலும் ஆலயம் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள் அமுல்ராஜ் மற்றும் உபயதாரர்கள், கருணாநிதி ராணி மேகநாதன், லோகநாதன், பாண்டுரங்கன், தாவித்ராஜா தருஷ்ட்டு அமுல்ராஜ், குமார், சின்னப்பொன்னு, கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .1
- கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.1
- சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- Post by Kali1
- சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- *அரை அடி இடத்திற்காக தொடரும் பிரச்சினை!ஆர்மி குடும்பத்தை அழேக்கா பந்தாடிய நபர்! சிறுமி என்றும் பாராமல் வண்டி ஏற்றி கொலை முயற்சி! 10க்கும் மேற்பட்டோர் ஆர்மி குடும்பத்தை சூறை! பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த குமார் (சுபேதார்) ராணுவத்தில் பெங்களூரில் பணியாற்றி வருகிறார் இவர் ரெட்டியூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் குமாரின் மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா மற்றும் தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரின் அரை அடி இடத்தை அருகில் உள்ள சிவராமன் என்பவர் சேர்த்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிவராமன் குடும்பத்தினர் குமார் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போன்று நேற்று காலை சிவ சக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் இருந்தபோது கோலம் போடும் தகராறில் மூதாட்டியை தாக்கி உள்ளனர். தேவனை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே போன்று மாலை நேரத்தில் சிவசக்தியின் தந்தையான மேகநாதன் (65) மற்றும் சிவசக்தி அவரின் பிள்ளைகள் என அனைவரையும் சிவராமன் குடும்பத்தினர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறு குழந்தைகள் என்றும் பாராமல் சிவராமன் குடும்பத்தினரில் ஒருவர் டூ வீலர் வண்டியை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்தார் பின்னர் இந்த சிறுமியை கண்ணம் மற்றும் வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவசக்தி குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். அதற்குள் குமார் குடும்பத்தினரை சிவராமன் குடும்பத்தினர் தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர். பின்னர் அடி வாங்கிய சிவசக்தி குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிவ சக்தி தனது பெண்ணை சிவராமன் குடும்பத்தினர் தகாத இடங்களில் கை வைத்து தாக்கியதாகவும் மேலும் காலையிலே அடிதடி பிரச்சினை நடக்கும்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்காது எனவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் எனவும் சிவசக்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் ஒரு ஆர்மி குடும்பத்தினரை மற்றொரு ஆர்மி குடும்பத்தினர் தாக்கும் பத பதக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..1