Shuru
Apke Nagar Ki App…
மேச்சேரியில் கொழுந்துவிட்டு எரிந்த பனை மரங்கள் : இளைஞர்கள் அட்டூழியம்? சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Salem_Updates
மேச்சேரியில் கொழுந்துவிட்டு எரிந்த பனை மரங்கள் : இளைஞர்கள் அட்டூழியம்? சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது, விபரீதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏராளமான பட்டாசுகளைக் கட்டித் தொங்கவிட்டு தீ வைத்துள்ளனர். இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதுடன், பனை மரங்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது. இந்த ஆபத்தான கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- Post by Kali1
- சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.1
- வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது... தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது... கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது... முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...1
- இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் திருநங்கைகள் நேற்று மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார சித்ரா பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கி சென்றனர்.1
- கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.1
- கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.1