Shuru
Apke Nagar Ki App…
ஓமலூர் முத்தநாயக்கன்பட்டி ஏதோ வாகனத்தில் அடிபட்டு சுயநலமில்லாமல் தவித்து ரோட்டு கிராஸ் பண்ணி கொண்டு இருந்தது அதை பாதுகாப்பாக அந்த இடத்தில் இருந்து க்ராஸ் பண்ணி விட்டார்
Kali
ஓமலூர் முத்தநாயக்கன்பட்டி ஏதோ வாகனத்தில் அடிபட்டு சுயநலமில்லாமல் தவித்து ரோட்டு கிராஸ் பண்ணி கொண்டு இருந்தது அதை பாதுகாப்பாக அந்த இடத்தில் இருந்து க்ராஸ் பண்ணி விட்டார்
More news from Karur and nearby areas
- குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.1
- திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.1
- திருப்பத்தூர் மாவட்டம் .* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 115-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு நாட்றம்பள்ளி சுற்றியுள்ள பச்சூர், வெலக்கல் நத்தம், பந்தாரப்பள்ளி, அக்ரஹாரம்,நாயனசெருவு, புதுப்பேட்டை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் வைத்தும் கோழி,ஆடு, பலி கொடுத்தும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் இழுத்தல்,கரகம், சடல் குத்தும் நிகழ்ச்சி,வானவேடிக்கை உள்ளிட்ட இந்நிகழ்ச்சிகளும் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் பெயரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3
- மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.1
- *அரை அடி இடத்திற்காக தொடரும் பிரச்சினை!ஆர்மி குடும்பத்தை அழேக்கா பந்தாடிய நபர்! சிறுமி என்றும் பாராமல் வண்டி ஏற்றி கொலை முயற்சி! 10க்கும் மேற்பட்டோர் ஆர்மி குடும்பத்தை சூறை! பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த குமார் (சுபேதார்) ராணுவத்தில் பெங்களூரில் பணியாற்றி வருகிறார் இவர் ரெட்டியூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் குமாரின் மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா மற்றும் தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரின் அரை அடி இடத்தை அருகில் உள்ள சிவராமன் என்பவர் சேர்த்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரது குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிவராமன் குடும்பத்தினர் குமார் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போன்று நேற்று காலை சிவ சக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் இருந்தபோது கோலம் போடும் தகராறில் மூதாட்டியை தாக்கி உள்ளனர். தேவனை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே போன்று மாலை நேரத்தில் சிவசக்தியின் தந்தையான மேகநாதன் (65) மற்றும் சிவசக்தி அவரின் பிள்ளைகள் என அனைவரையும் சிவராமன் குடும்பத்தினர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறு குழந்தைகள் என்றும் பாராமல் சிவராமன் குடும்பத்தினரில் ஒருவர் டூ வீலர் வண்டியை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்தார் பின்னர் இந்த சிறுமியை கண்ணம் மற்றும் வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவசக்தி குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்தனர். அதற்குள் குமார் குடும்பத்தினரை சிவராமன் குடும்பத்தினர் தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர். பின்னர் அடி வாங்கிய சிவசக்தி குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிவ சக்தி தனது பெண்ணை சிவராமன் குடும்பத்தினர் தகாத இடங்களில் கை வைத்து தாக்கியதாகவும் மேலும் காலையிலே அடிதடி பிரச்சினை நடக்கும்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோல் திரும்பவும் தகராறு ஏற்பட்டிருக்காது எனவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர் எனவும் சிவசக்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் ஒரு ஆர்மி குடும்பத்தினரை மற்றொரு ஆர்மி குடும்பத்தினர் தாக்கும் பத பதக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை 3:45 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5:25 மணிமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.1