Shuru
Apke Nagar Ki App…
ஏற்காட்டில் அதிவேகமாக சென்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்து! சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Rajendran
ஏற்காட்டில் அதிவேகமாக சென்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்து! சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாவட்டம் ஏற்காடு ஐந்து ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் ஏற்காடு பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுற்றுலா பயணிகளின் அழைப்பை ஏற்று அவர்களை பிக்கப் செய்வதற்காக, ஏற்காடு டவுன் பகுதியில் அதிவேகமாக சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் சாய்ந்து தீப்பொறி ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுனர் சுந்தரத்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- இராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே பனந்தோப்பில் திருநங்கைகள் நேற்று மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார சித்ரா பௌர்ணமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதம் வாங்கி சென்றனர்.1
- வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது... தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது... கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது... முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...1
- இன்று நாடு முழுவதும் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தாவாந்தெரு பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அஜித் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.1
- கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.1
- குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.1
- கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது1
- எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரண்டாவது நாளாக சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது... எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தேரோட்டம் விழா விமர்சையாக நடைபெற்ற வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தேரோட்டமானது மேட்டு தெருவிலிருந்து கடைவீதி வரை இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது... முன்னதாக அலங்கரிக்கப்பட்டுள்ள மூன்று தேர்களில் முதலாவதாக விநாயகரும் , இரண்டாவதாக பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரரும் மற்றும் மூன்றாவதாக முருக பெருமான் ஆகிய மூன்று தேர்களையும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவசிவா மற்றும் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்... இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது...1