Shuru
Apke Nagar Ki App…
கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
M.P.Palani Samy
கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.1
- அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.1
- மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.3
- சேலத்தில் தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆவின் பால்! சிக்கிய நபர்... சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது ஆவின் பால் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிலையத்தில் இருந்து ஏஜென்ட் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு 500 லிட்டர் ஆவின் பாலை எடுத்துச் சென்றபோது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் பாலை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்து பாலை எடுத்துச் சென்ற நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்ததால் ஆவின் பால் மேல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.1
- ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தருமபுரியில் ஒரு மணி நேரம் கனமழை: வெப்பத்தால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை திடீரென வானிலை மாறி குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து, தருமபுரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், தருமபுரியைச் சுற்றியுள்ள நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.1