மொரப்பூர் ரயில் நிலையத்தில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சொந்த ஊர் வந்த இளைஞருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. மொரப்பூர் ரயில் நிலையத்தில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சொந்த ஊர் வந்த இளைஞருக்கு உறவினர்கள், கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், நான் முதல்வன் திட்டத்தில் படித்த தமிழகத்தைச் சார்ந்த 56 இளைஞர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கட்டரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார், என்ற இளைஞர் தேர்ச்சி பெற்று, இந்திய அளவில் 585 ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இந்த நிலையில் யூபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பிறகு, இன்று சென்னையிலிருந்து ரயில் மூலமாக சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது கட்டரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்த இளைஞருக்கு, மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து, மேல தாளங்கள் முழங்க மயிலாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞரின் தாயார் ஆர்த்தி எடுத்து வரவேற்றார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களுக்கு மொரப்பு பகுதியைச் சார்ந்வர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வில் வெற்றி பெற்றதை குறித்து அருண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து கடந்த எட்டு வருடங்களாக யூபிஎஸ்சி தேர்வுக்காக படித்து, மூன்று முறை நேர்காணலுக்கு சென்று அதில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை. இந்த முறை தமிழ்நாட்டில் முக்கிய திட்டமான நான் முதல்வன் திட்டம், ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர் இணைந்து நடத்தியதால் நான் வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். மேலும், நான் இந்த தேர்வுக்காக 8 வருடங்களாக படித்தேன். தற்போது இருக்கின்ற மாணவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்படாது. அவர்கள் குறுகிய காலத்திலேயே இது போன்ற தேர்வில் வெற்றி பெற முடியும். அதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசு அவர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது என்றும் கூறினார்

- Post by Govindappa Govindappa1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.1
- Post by Saravanan Vasanthi1
- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by அன்பரசு1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு,பிக்கிலிகாப்புக் காடு, பிக்கனஅள்ளி காப்புக் காடு மற்றும் மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில் தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலத்தை தேடி வருகிறது. கோடை காலம் துவங்கி கடும் வெயில் சுட்டெரிப்பதால் பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாறு அணையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து கூட்டமாக நீரில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு வருகிறது. இதனை பொது மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.1
- Post by Govindappa Govindappa1
- Post by Saravanan Vasanthi1