Shuru
Apke Nagar Ki App…
தேனியில் வாக்காளர் தின உறுதிமொழி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Theni
தேனியில் வாக்காளர் தின உறுதிமொழி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் ஜவுளி துணிகள் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே ஹக்கீம் சேட் என்பவர் தனியார் ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் தனது நிறுவனத்தில் 13 நவீன ரக தையல் இயந்திரங்களை வைத்து பத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சட்டைகளை தைக்கும் தொழிலாளர்களை வைத்து புதிய ஆடைகளை தயாரிக்கும் பணிகளை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் நிறுவனத்தை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் நிறுவனத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 நவீன ரக இயந்திரங்களான தையல் மெஷின் , காஜா பட்டன் மெஷின் , கட்டிங் மெஷின் மற்றும் புதிதாக தயாரித்து வைத்திருந்த ஆடைகள் புதிய ஆடைகளை தயாரிக்கும் துணிகள் உள்பட ஏராளமான சாதனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. அதிகாலையில் வழக்கம் போல் நிறுவனத்திற்கு வந்த பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்2
- நேர்மையான முறையில் பரிசீலனை நடக்குமா?கம்பம் ஊராட்சி ஒன்றியம் தன்னச்சையாக லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வேலை தருவது நியாயமா? வாங்கியது பணம்? இல்லை பெண்களா?1
- திண்டுக்கல்லை அடுத்த சின்னபள்ளப்பட்டி அருகே சின்ன பள்ளப்பட்டி சேர்ந்த ஆரிப் அமானுல்லா என்பவருக்கு சொந்தமான MRA டிரேடர்ஸ் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோன் உள்ளிட்ட 3 பழைய பிளாஸ்டிக் பொருள்கள் குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 5 வண்டிகளில் 4மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- சீனாவின் மீண்டும் ஒரு நவீன கண்டுபிடிப்பு விமானநிலையங்களில் சார்ஜ்ர் அது எப்படி என்று தான் பாருங்கள்.1
- இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கலா வின்சிலா தலைமை வகித்தார் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜெபா எபனேசர் வரவேற்றார் பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வாக்காளர்களின் கடமைகள், உரிமைகள் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவ ஆசிரியர்களுக்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் உதவி பேராசிரியர்கள் ஐரீன் குளோரியா, ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, அனிதா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 49 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.190.10 வரை, இரண்டாம் ரகம் ரூ.105.10 முதல் ரூ.114 வரை விற்பனை செய்யப்பட்டது.1
- சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு தேனியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் 37 ஆவது சாலை பாதுகாப்பு மாதம் உறுதிமொழி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் தேனி நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்டம் மற்றும் கம்மவார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கையில் பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர் இந்த ஊர்வலம் பங்களா மாடு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கி தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள வாணி ஸ்வீட்ஸ் அருகில் நிறைவுற்றது இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் மற்றும் நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் இன்ஜினியர் குமணன் மற்றும் தேனி ஏடி திருக்குமரன் ஆண்டிபட்டி ஏ டி ராமமூர்த்தி மற்றும் டிஎஸ்பி முத்துக்குமார் தேனி காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் ஜவகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ இ ராஜசேகர் டெக்னிக்கல் இன்ஜினியர் செந்தில் மற்றும் கம்மவார் கல்லூரி செயலாளர் மகேஷ் ஆகியோர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்ப்போம் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் முறையான பயிற்சி இல்லாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் அதிக வேகம் அதிக சத்தம் ஆபத்தை விளைவிக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது1