தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2026 - 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று புதிய பட்டமளிப்பு விழா நடை பெற்றது. 2022-2023, 2023-2024 ஆண்டுகளில் பட்டம் பெற்ற 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரியில் 22 இளநிலை துறைகள். 14 முதுநிலை துறைகள், 8 ஆராய்ச்சி துறைகள் மூலம் கல்லூரியில் 5840 மாணாக்கர்களும், 66 ஆசிரியர் பணியாளர்களும், 142 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 16 ஆசிரியரியல்லா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2022-2023 ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் 1158 இளநிலை மாணவர்களும், 355 முதுநிலை மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த 5 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 2023-2024-ஆம் ஆண்டில் 1188 இளநிலை மாணவர்களும் 325 முதுநிலை மாணவர்களும் 11 எம்.பில் மாணவர்களும் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்வி ஆண்டிலும் 4 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் கோகண்ணன் அவர்கள் தலைமையேற்று வரவேற்று பேசினார். கல்லூரி அறிக்கையினை முனைவர் விஜயா வாசித்தார். தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா வாழ்த்து துரை வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 35 மாணாக்கர்களும் இவ்விழாவில் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற அனைத்து மாணாக்கர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்விழாவில் செனட் உறுப்பினர் முனைவர் .முருகேசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள். அலுவலகப் பணியாளர்கள், தேசிய மாணவர் படை அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், உடற்கல்வி இயக்குனர், நூலகர், பட்டம் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

- தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்1
- பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-271
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்.1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்1
- பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எம்பி உறுதி தர்மபுரி மாவட்டம் கெலவள்ளி ஊராட்சியில், ஜடையன் கொட்டாய் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நியாய விலை கட்டிடம் திறப்பு விழாவின் போது, அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை மனுவாக அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட எம்பி வரும் ஜனவரி.31 அன்று பாராளுமன்றத்தின் இந்த மனுவினை துறை அமைச்சரிடம் அளிப்பதாகவும் இந்த மனு குறித்து பொறுமையாக விசாரித்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன், என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்1