Shuru
Apke Nagar Ki App…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்
CHANDRA SEKAR
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்
More news from Tamil Nadu and nearby areas
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூர் பகுதியில் அமெரிக்க அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு சார்பில் அமெரிக்கா ஏகாதிபத்திய அதிபர் டிரம்பை கண்டித்தும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவே அமெரிக்க ராணு.வம் கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் வே.ஜெய்ஹிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சா.பாண்டியன் வழக்கறிஞர் மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் அ.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரா.கதிரப்பன், எஸ்.ஈஸ்வரன், என்.பவுன்ராஜா, மற்றும் வைரமுத்து இருதயராஜ், ஸ்டீபன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் திரளாக பங்கேற்று அமெரிக்க அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டு கண்டன உரையாற்றினார்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.1
- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்2
- ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.1
- *தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.1
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அமெரிக்கா ஏகாதிய பத்தியத்தின் வெறியாட்டத்தை முறியடிப்போம் என்று சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரைகள் மற்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.1
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.1