Shuru
Apke Nagar Ki App…
ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.
நம்ம ஊரு புதுக்கோட்டை
ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.
More news from Tamil Nadu and nearby areas
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- சென்னை கே கே நகர் மேற்கு2
- பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன .... கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உரை..!1
- போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது. திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.1
- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம் (VIDEO) புதுகை, வயலோகம் மகான் ஹஜ்ரத் முகமது கனி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு டிச.21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நெற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். அதனையடுத்து நேற்று இரவு 2-ம் நாள் விழாவில் தர்கா முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.1