logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஈரோடு அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்தி வாக்குவாதம் இறுதியில் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (40). தறி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, அவ்வப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார், இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்த ராஜேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் . இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் நாகராஜை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுபோதையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். .குடும்பத் தகராறில் மதுபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

1 hr ago
user_Dinesh
Dinesh
கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
1 hr ago

ஈரோடு அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்தி வாக்குவாதம் இறுதியில் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (40). தறி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, அவ்வப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார், இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்த ராஜேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் . இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் நாகராஜை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுபோதையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். .குடும்பத் தகராறில் மதுபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

More news from தமிழ்நாடு and nearby areas
  • திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் சத்தியமங்கலம் அடுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
    1
    திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்
சத்தியமங்கலம் அடுத்த 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. 
இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. 
இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    24 min ago
  • சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
    1
    சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. 
இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. 
இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
    user_JAIKUMAR DURAISAMY
    JAIKUMAR DURAISAMY
    Photographer சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சித்தாளந்தூர் மாரியம்மன் கோயிலில் 2ஆவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சித்தாளந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (20.10.26) இரவு 8:30 மணியளவில் இரண்டாவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் சித்தாளந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு பெரிய மாரியம்மன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
    1
    சித்தாளந்தூர் மாரியம்மன் கோயிலில் 2ஆவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சித்தாளந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (20.10.26) இரவு 8:30 மணியளவில் இரண்டாவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் சித்தாளந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு பெரிய மாரியம்மன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
    user_Thangaraj.V
    Thangaraj.V
    திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.
    1
    கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர்.
இது அரசியல்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! ​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். ​ தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. ​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    1
    "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
"அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி!
​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.
குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார்.
​
தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    user_Sekaran
    Sekaran
    Local News Reporter Coimbatore South, Tamil Nadu•
    16 hrs ago
  • ராசிபுரம் அருகே நார்வேயில் பணிபுரியும் மரைன் இன்ஜினியர் உட்பட இருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஓணாங்கரடு அருகே வசிக்கும் துரைசாமி என்பவரின் மருமகனான நடராஜன் (46), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் நார்வே நாட்டில் உள்ள நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனது தோட்டத்தில் வெங்காயம் அறுவடைப் பணிக்கு அவ்வப்போது வரும் மாரிமுத்து (46) என்பவரை அழைத்துக்கொண்டு வேட்டையாடச் சென்றுள்ளார். இருவரும் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் (TN 28 VF 0988) சென்றுள்ளனர். அப்போது, ஓணாங்கரடு வழியாக இரவு ரோந்துப் பணியில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும், நடராஜனின் மாமனார் துரைசாமி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் துப்பாக்கியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி வேறொரு நாட்டு துப்பாக்கி எனவும், அதற்கு உரிய லைசென்ஸ் இல்லை எனவும் தெரியவந்ததை அடுத்து, நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
    1
    ராசிபுரம் அருகே நார்வேயில் பணிபுரியும் மரைன் இன்ஜினியர் உட்பட இருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஓணாங்கரடு அருகே வசிக்கும் துரைசாமி என்பவரின் மருமகனான நடராஜன் (46), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர்.
இவர் நார்வே நாட்டில் உள்ள நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, மாமனார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனது தோட்டத்தில் வெங்காயம் அறுவடைப் பணிக்கு அவ்வப்போது வரும் மாரிமுத்து (46) என்பவரை அழைத்துக்கொண்டு வேட்டையாடச் சென்றுள்ளார். இருவரும் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் (TN 28 VF 0988) சென்றுள்ளனர்.
அப்போது, ஓணாங்கரடு வழியாக இரவு ரோந்துப் பணியில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
மேலும், நடராஜனின் மாமனார் துரைசாமி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் துப்பாக்கியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி வேறொரு நாட்டு துப்பாக்கி எனவும், அதற்கு உரிய லைசென்ஸ் இல்லை எனவும் தெரியவந்ததை அடுத்து, நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேல் தெரு சேர்ந்த வடிவேல் என்பவருக்கும், அவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகப் பகுதியில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே, ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பட்டப்பகலில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேல் தெரு சேர்ந்த வடிவேல் என்பவருக்கும், அவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகப் பகுதியில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே, ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். 
உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பட்டப்பகலில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஈரோடு அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்தி வாக்குவாதம் இறுதியில் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (40). தறி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, அவ்வப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார், இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்த ராஜேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் . இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் நாகராஜை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுபோதையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். .குடும்பத் தகராறில் மதுபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
    1
    ஈரோடு அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்தி வாக்குவாதம் இறுதியில் போதையில்  மனைவியை அடித்துக் கொன்ற கணவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (40). தறி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, அவ்வப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த  நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார், இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்த ராஜேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் . 
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் நாகராஜை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுபோதையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். .குடும்பத் தகராறில் மதுபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.