ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேல் தெரு சேர்ந்த வடிவேல் என்பவருக்கும், அவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகப் பகுதியில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே, ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பட்டப்பகலில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேல் தெரு சேர்ந்த வடிவேல் என்பவருக்கும், அவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகப் பகுதியில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே, ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பட்டப்பகலில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.1
- சித்தாளந்தூர் மாரியம்மன் கோயிலில் 2ஆவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சித்தாளந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (20.10.26) இரவு 8:30 மணியளவில் இரண்டாவது நாள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் தீபாராதனை பூஜை நடைபெற்றது. இதில் சித்தாளந்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு பெரிய மாரியம்மன் சுவாமியை தரிசனம் செய்தனர்.1
- "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.1
- பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.1
- காலாவதியான ஒயின் பாட்டில் விற்பனை, கோபிசெட்டிபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் பரபரப்பு – இருவர் மருத்துவமனையில் சிகிச்சை கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம், பொன்னுச்சாமி வீதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (36). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மொட்டச்சூரை சேர்ந்த விஜயன் (40) என்பவரும் இன்று மாலை காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு (கடை எண்: 3606) சென்றுள்ளனர். அங்கு தலா 440 ரூபாய் வீதம் கொடுத்து ஒயின் பாட்டில்களை வாங்கியுள்ளனர். பின்னர், கடையில் அமர்ந்து மதுபானத்தை அருந்தியபோது, அதிலிருந்து ஒரு மாறுபட்டவிசித்திரமான வாசனை வீசியுள்ளது, இதனால் சந்தேகமடைந்த இருவரும் பாட்டிலை உற்று நோக்கியபோது, அதில் தூசிகள் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த ஒயின் பாட்டிலின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை சோதித்தபோது, அதில் 2021-ஆம் ஆண்டோடு காலாவதியானது என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான மதுபானத்தை டாஸ்மாக் கடை நிர்வாகம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததை அறிந்து அவர்கள் அதிர்ச்சியுற்றனர்.இது குறித்து ஜோதிலிங்கம் மற்றும் விஜயன் ஆகியோர் உடனடியாக சிறுவலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுவலூர் போலீஸார், சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்த 13 ஒயின் பாட்டில்களைக் கைப்பற்றி சோதித்தனர். அவை அனைத்தும் 2021-லேயே காலாவதியானது என்பதை போலீஸாரும் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் போது, அந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கதிர்வேல் மற்றும் மேற்பார்வையாளர் சஞ்சீவி நாதன் ஆகியோர் பணியில் இருந்தனர். காலாவதியான மதுபானங்கள் கடைக்கு எப்படி வந்தது, இருப்பு பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர், இதற்கிடையில், காலாவதியான மற்றும் தூசி கலந்த மதுபானத்தை அருந்தியதால் ஜோதிலிங்கம் மற்றும் விஜயன் ஆகிய இருவரும், சிகிச்சைக்காக கோபி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர், அரசு டாஸ்மாக் கடையிலேயே காலாவதியான மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.1
- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேல் தெரு சேர்ந்த வடிவேல் என்பவருக்கும், அவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகப் பகுதியில் இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே, ஆத்திரமடைந்த ஆரோக்கியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வடிவேலின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். உடனடியாக அவர் அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த உடனேயே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், தப்பியோட முயன்ற மருமகன் ஆரோக்கியத்தை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பட்டப்பகலில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- ஈரோடு அருகே கணவன் மனைவி இருவரும் மது அருந்தி வாக்குவாதம் இறுதியில் போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே வாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (40). தறி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவர்களுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, அவ்வப்போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் நாகராஜ் மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார், இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்த ராஜேஸ்வரி மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் . இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவர் நாகராஜை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுபோதையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். .குடும்பத் தகராறில் மதுபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .1