Shuru
Apke Nagar Ki App…
கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.
Senthilkumarankumaran
கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றிய அமைச்சர். இது அரசியல்.1
- "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.1
- பொள்ளாச்சி வால்பாறை சாலையில் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு பொள்ளாச்சி - வால்பாறை மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிப்பு! பொள்ளாச்சி அக்டோபர் 21 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைச்சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆழியார் வன சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. அதேபோல் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ராட்சத பாறைகள் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ளதாலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாலும், இரவு நேரத்தில் மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முடியாது என வனத்துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் கனரக வாகனங்கள் மூலம் பாறைகள் மற்றும் மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ண சாமி நேரில் வந்து ஆய்வு செய்தார் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வால்பாறை பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.1
- உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.1
- திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் சத்தியமங்கலம் அடுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை. கோவைக்கும் அது விடபட்டு உள்ளது.1
- வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள 2 வது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்து சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு வால்பாறை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறைகள் மரங்கள் விழுந்து சுமார் 10 மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு சீரமைக்கும் பணி தீவிரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவால் ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது இதனால் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் தலைமையில் பணியாளர்கள் பாறைகளை வெடிவைத்து தகர்த்து சாலையை சிரமைக்கும் பணியை துரிதமாக தீவிரப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருசக்கர வாகனம் மற்றும் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவத்தால் சாலை மிகவும் பழுதாகி உள்ளதால் சாலையை சீரமைக்க காலதாமதமாக லாம் என்றும் சீரமைக்கும் பணி முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 21.10.20261