Shuru
Apke Nagar Ki App…
தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
RAJA news
தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
More news from Dindigul and nearby areas
- தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.1
- நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம் இது தொடர்பாக திண்டுக்கல் நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்தி மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடையாள அட்டைகளை சோதனை செய்தும் மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்1
- தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்1
- உடுமலை ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு இரண்டு அடிகளார் வருகை திருப்பூர் மாவட்டம், உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர், கஜவல்லி வனவல்லி சமேத கல்யாண சுப்ரமண்யர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் ராமானந்த குமரகுருபர சாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் நிகழ்வில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.......1
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழிச்சாலையில் பாறையில் சிக்கிய கேரளா வாகனம் உடனடியாக கேரளா சுற்றுலா வாகனத்தை மீட்டனர்1
- திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2