Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திண்டுக்கல் செய்திகள்
திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம் இது தொடர்பாக திண்டுக்கல் நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்தி மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடையாள அட்டைகளை சோதனை செய்தும் மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்1
- தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.1
- மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.1
- தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?1
- தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தோட்ட வேலைக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சியை மணல் அல்ல பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆத்தூர், செம்பட்டி அடுத்த S.பாறைப்பட்டியை சேர்ந்த பழனி குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் முருகன் என்பவர் தோட்டத்திற்கு பண்ணை குட்டை அமைப்பதற்காக தாத்தா குளம் கரை வழியாக சென்று தோட்டத்தில் JCB வாகனம் மூலம் குழி தோண்டி கொண்டிருந்தபோது மழை பெய்ததால் தொடர்ந்து குழி தோண்ட முடியவில்லை இதனால் ஜேசிபி வாகனத்தை தாத்தா குளம் கரை வழியாக சென்றதால் குளத்தில் மண் திருடியதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் வட்டாட்சியரிடம் தகவல் சொல்லி மேற்படி வாகனத்தை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்று அம்பாத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்ய ஜேசிபி வாகனத்தை கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள் நாங்கள் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்1
- திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2