logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 hr ago
user_Shakthi
Shakthi
Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
1 hr ago

தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்! கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது. மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தேனி மாவட்டம் கம்பத்தில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் பறிமுதல்!
கேரளாவுக்கு கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 2 சொகுசு கார்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக யானைத் தந்தங்களைக் கடத்திச் செல்ல முயன்றதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் தீனதயாளுக்கு, கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனத்துறையினர் கம்பம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த கார்களில் 2 ஜோடி யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், கார்களில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,  கம்பம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபிரபு (42), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த அன்னமராஜா (53), மதுரை பாப்பாக்குடி சிக்கந்தர் சாவடி தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (53), ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவந்தது.
மேலும், யானைத் தந்தங்களை கேரளாவில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், கிருஷ்ணபிரபு, அன்னமராஜா, வாசுதேவன், விஜயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். யானைத் தந்தங்களையும், அவற்றைக் கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பத்தில் யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    1
    திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்ட சிறைச்சாலையில் 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்.... தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்.... தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகள் 17 பேர் தப்பி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அந்த சிறை சாலையில் ஒரே அறையில் தங்கி இருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி நாடகம் ஆடி சிறை காவலர் தாக்கி விட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென் மண்டல விஜயேந்திர பிடாரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயந்திர பிடாரி, சிறையில் இருந்து தப்பி சென்ற விசாரணை கைதிகளை பிடிக்கும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கைதிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்களை தற்போது தெரிவிப்பது சரியாக இருக்காது. முழு விவரங்களையும் உங்களுக்கு பிறகு சொல்கிறேன். முதல் கட்டமாக தப்பி ஓடிய விசாரணை கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் மாநில எல்லைகளில் இவரை தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    2
    தேனி மாவட்ட சிறைச்சாலையில் 17 விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்....  தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி
தேனி மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் தப்பிய சம்பவம்....  தப்பிய ஓடிய கைதிகளை பிடிக்க 17 தனி படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டை நடைபெறுவதாக தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி பேட்டி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகள் 17 பேர் தப்பி ஓடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அந்த சிறை சாலையில் ஒரே அறையில் தங்கி இருந்த 17 கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி நாடகம் ஆடி சிறை காவலர் தாக்கி விட்டு சிறையின் பிரதான வாயில் வழியாக தப்பி ஓடி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து தென் மண்டல விஜயேந்திர பிடாரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயந்திர பிடாரி, 
சிறையில் இருந்து தப்பி சென்ற விசாரணை கைதிகளை பிடிக்கும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தப்பி ஓடிய கைதிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்களை தற்போது தெரிவிப்பது சரியாக இருக்காது. முழு விவரங்களையும் உங்களுக்கு பிறகு சொல்கிறேன். முதல் கட்டமாக தப்பி ஓடிய விசாரணை கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மற்றும் மாநில எல்லைகளில் இவரை தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, "மனித உயிர்களைப் பறிக்கும் அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்" என வலியுறுத்திப் பரபரப்பு போராட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, "மனித உயிர்களைப் பறிக்கும் அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்" என வலியுறுத்திப் பரபரப்பு போராட்டம் நடைபெற்றது.​தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூமிநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​​"தமிழக அரசே! மனித உயிர்களைப் பறிக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூடு!" ​எனக் கோஷங்களை எழுப்பினர். ​மேலும், பீகார், குஜராத், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளதைப் போல, தமிழகத்திலும் மக்களின் நலன் கருதி மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ​ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, "மனித உயிர்களைப் பறிக்கும் அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்" என வலியுறுத்திப் பரபரப்பு போராட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, "மனித உயிர்களைப் பறிக்கும் அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்" என வலியுறுத்திப் பரபரப்பு போராட்டம் நடைபெற்றது.​தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூமிநாதன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​​"தமிழக அரசே! மனித உயிர்களைப் பறிக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூடு!"
​எனக் கோஷங்களை எழுப்பினர்.
​மேலும், பீகார், குஜராத், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளதைப் போல, தமிழகத்திலும் மக்களின் நலன் கருதி மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
​ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    user_Theni
    Theni
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 day ago
  • தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
    1
    தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    8 hrs ago
  • நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்!
திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_Riyaz Khan
    Riyaz Khan
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி மாவட்ட சிறைச்சாலையில் வார்டனை தாக்கிவிட்டு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்! தேனி முதல் விழுப்புரம் வரை தீவிர தேடுதல் வேட்டை… எல்லைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர்.இதனை நம்பி சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மறைந்திருந்த கைதிகள் திடீரென வார்டனையும், காவலர்களையும் தாக்கிவிட்டு, லிங்கம், ராஜாசிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம்,சபரி, பொன்முத்து, நிஜந்த், கார்த்திக் ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், பிரவீண், முத்து இளங்கோ, ராஜுவீன், ஆகிய 17 சிறை கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் சிறை வார்டனுக்கு தலையில் பலத்த காயமும்,மேலும் இரு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவலர்கள் தாக்கப்பட்டதில் சிறை வளாகத்தில் ரத்தம் சிதறிக்கிடந்த காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், சிறை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட சிறைச்சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி சர்வ சாதாரணமாக 17 சிறைக் கைதிகள் தப்பி உள்ள சம்பவம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் பிரவீன் என்ற ஒரு குற்றவாளியை போலீசார் துரத்திப் பிடித்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியும் பிடிக்கப் பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. பேட்டி: விஜயேந்திர பிடாரி தென் மண்டல காவல்துறை தலைவர்.
    1
    தேனி மாவட்ட சிறைச்சாலையில் வார்டனை தாக்கிவிட்டு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!
தேனி முதல் விழுப்புரம் வரை தீவிர தேடுதல் வேட்டை… எல்லைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர்.இதனை நம்பி சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மறைந்திருந்த கைதிகள் திடீரென வார்டனையும், காவலர்களையும் தாக்கிவிட்டு,
லிங்கம், ராஜாசிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம்,சபரி, பொன்முத்து, நிஜந்த், கார்த்திக் ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், பிரவீண், முத்து இளங்கோ, ராஜுவீன், ஆகிய 17 சிறை கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் சிறை வார்டனுக்கு தலையில் பலத்த காயமும்,மேலும் இரு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காவலர்கள் தாக்கப்பட்டதில் சிறை வளாகத்தில் ரத்தம் சிதறிக்கிடந்த காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி ஆகியோர் சிறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், சிறை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட சிறைச்சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி சர்வ சாதாரணமாக 17 சிறைக் கைதிகள் தப்பி உள்ள சம்பவம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் பிரவீன் என்ற ஒரு குற்றவாளியை போலீசார் துரத்திப் பிடித்துள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியும் பிடிக்கப் பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேட்டி: விஜயேந்திர பிடாரி
தென் மண்டல காவல்துறை தலைவர்.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    2
    திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.