logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இடம் ஆனைமலை பொள்ளாச்சி!

10 hrs ago
user_Varun pradeep B
Varun pradeep B
Political party office Coimbatore South, Tamil Nadu•
10 hrs ago

சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இடம் ஆனைமலை பொள்ளாச்சி!

More news from தமிழ்நாடு and nearby areas
  • மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி . சாலைகளை சீரமைப்பு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பாதுகாப்பில் இந்த சுருளி அருவிப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் தங்களின் இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங் கரையில் எல் தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் சுருளி அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுருளி அருவி பகுதி தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது இதனால் கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் . இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசி பாறை, தூவானம் அணை வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகை பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது . மேலும் பலத்த காற்றுடன் அருவிப்பகுதியில் மழை பெய்ததால் அருவிக்குச் செல்லும் சாலையில் இராட்சச மரம் முறிந்து விழுந்தும் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடைக்கும் மரங்களை அகற்றி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் . மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு செல்கின்றனர் .
    1
    மூன்று மாதங்களுக்குப் பிறகு
சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி  .
சாலைகளை சீரமைப்பு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது 
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பாதுகாப்பில் இந்த சுருளி அருவிப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் உள்ளது.
நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் தங்களின் இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங் கரையில் எல் தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும்  வருகை தந்து  அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் 
இந்நிலையில் சுருளி அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுருளி அருவி பகுதி தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது இதனால் கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .
இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு,
அரிசி பாறை, 
தூவானம் அணை வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகை பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது .
மேலும் பலத்த காற்றுடன் அருவிப்பகுதியில் மழை பெய்ததால் அருவிக்குச் செல்லும் சாலையில் இராட்சச மரம் முறிந்து விழுந்தும் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும்  போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடைக்கும் மரங்களை அகற்றி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் .
மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு செல்கின்றனர் .
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    7
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 
இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது 
இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது
தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் 
பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    1
    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை  கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • பணம்Vsபாசம் !!! பணமும்/பாசமும் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் !!!
    1
    பணம்Vsபாசம் !!! பணமும்/பாசமும் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    1
    நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    11 hrs ago
  • ​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ​ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின. ​இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ​இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின.
​இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
​இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேமுதிகVsதிமுக !!! பிரேமலதா வெளிப்படையாக சொல்லிய உண்மை !!!
    1
    தேமுதிகVsதிமுக !!! பிரேமலதா வெளிப்படையாக சொல்லிய உண்மை !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.