Shuru
Apke Nagar Ki App…
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்வு முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா அக்.11 முதல் 9 நாட்கள் நடைபெற்றது. தினமும் அன்னபூரணி, துர்காபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அன்னை காட்சியளித்தார். விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளில் வலம் வந்தார். கிழக்குப் புறம் அசுரன் கூடத்தில் பூஜைக்குப் பின் சிவாச்சாரியார் ஐந்து அம்புகள் எய்தி மகிஷாசூரனை வதம் செய்தார். அம்புகளை மக்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர். சுற்றுவட்டார மக்கள் ஏராளமாகக் கலந்துகொண்டனர்.
ABDUL SALAM
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்வு முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா அக்.11 முதல் 9 நாட்கள் நடைபெற்றது. தினமும் அன்னபூரணி, துர்காபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அன்னை காட்சியளித்தார். விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளில் வலம் வந்தார். கிழக்குப் புறம் அசுரன் கூடத்தில் பூஜைக்குப் பின் சிவாச்சாரியார் ஐந்து அம்புகள் எய்தி மகிஷாசூரனை வதம் செய்தார். அம்புகளை மக்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர். சுற்றுவட்டார மக்கள் ஏராளமாகக் கலந்துகொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.1
- திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு திறப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூபாய் 2.65 கோடி செலவில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று 21/10/26 திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா உள்ளார்.1
- திருப்பத்தூர் அருகேஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் *! *ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம்; நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இளையாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கைலாசநாத சுவாமி – நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு மகர்நோன்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ கைலாசநாத சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு எதிரே உள்ள ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த மகர்நோன்பு உற்சவத்தில் இளையாத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இளையாத்தங்குடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.1
- வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.1
- வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்1
- புதுக்கோட்டை தனியார் பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார் *விஜயதசமி யை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளியின் சார்பில் பன்னீர் தெளித்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்1
- அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்2
- முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்வு முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா அக்.11 முதல் 9 நாட்கள் நடைபெற்றது. தினமும் அன்னபூரணி, துர்காபரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் அன்னை காட்சியளித்தார். விஜயதசமியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளில் வலம் வந்தார். கிழக்குப் புறம் அசுரன் கூடத்தில் பூஜைக்குப் பின் சிவாச்சாரியார் ஐந்து அம்புகள் எய்தி மகிஷாசூரனை வதம் செய்தார். அம்புகளை மக்கள் ஆர்வத்துடன் சேகரித்தனர். சுற்றுவட்டார மக்கள் ஏராளமாகக் கலந்துகொண்டனர்.1