தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் அதிமுகவில் இருந்து பல பதவிகளை பெற்று பலனடைந்து விட்டு இன்று மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் விளைவிக்கும் வகையில் தவெகவில் இணைந்ததாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இன்று ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளது எனவும். அதிமுக ஆட்சிக்காலங்களில் செய்த சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பதாக கூறினார். மேலும் மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறுகையில் கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பதாக கூறினார். தற்போது அதிமுக வேட்பாளராக களம் காணும் பானுமதி மக்களிடையே நன்மதிப்பையும் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையும் உள்ளது எனவும் கூறினார். மேலும் தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.
தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் அதிமுகவில் இருந்து பல பதவிகளை பெற்று பலனடைந்து விட்டு இன்று மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் விளைவிக்கும் வகையில் தவெகவில் இணைந்ததாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இன்று ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளது எனவும். அதிமுக ஆட்சிக்காலங்களில் செய்த சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பதாக கூறினார். மேலும் மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறுகையில் கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பதாக கூறினார். தற்போது அதிமுக வேட்பாளராக களம் காணும் பானுமதி மக்களிடையே நன்மதிப்பையும் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையும் உள்ளது எனவும் கூறினார். மேலும் தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.
- கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த லட்சுமணன் செய்தியாளர்களை சந்திக்கையில் தாராபுரம் தனித் தொகுதியில் 50 ஆண்டு காலமாக அருந்ததிர் சமுதாய மக்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனவும். தற்பொழுது தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியான கம்யூனிஸ்ட் தனது முடிவினை தன்னிச்சையாக எடுத்து தாராபுரம் இடைத்தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். மேலும் தனது வெற்றியானது அருந்ததியர் சமுதாய மக்களின் வெற்றி எனவும். தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தனது குரல் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலிக்கும் எனவும் கூறினார்.1
- *தேனியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு - சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்* *மாற்று பேருந்து மூலம் ஸ்டெப்னி எடுத்து வரப்பட்டு மாற்றும் பணியில் ஈடுபட்ட ஓட்டுநர்* தேனி மாவட்டம் தேனியில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சென்ற அரசுப் பேருந்து அங்கிருந்து பயணிகளுடன் தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தேனி பங்களாமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது, இதனை அடுத்து சாதுரியமாக செயல்பட்ட பேருந்தின் ஓட்டுனர் பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பேருந்தில் ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்தின் மூலம் ஸ்டெப்னி எடுத்துவரப்பட்டு பேருந்தில் டயரை சரி செய்யும் பணியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மூணாறுக்கு மலைப்பாதை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகளில் செல்லும் இந்த பேருந்தில் முறையாக பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இங்கு நடந்ததை போன்று மலைப்பாதையில் நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும் எனவும் இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்களின் கோரிக்கை மற்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.1
- பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. கரூர்:17.09.2026 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.1
- மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர். வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது 7 புண்ணிய தீர்த்தங்கள் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.1
- இந்த மாட்டுக்கு உள்ள அறிவை பாருங்கள். எப்படி சென்றால் அந்த தண்ணீரை கடக்க முடியும் என்று தெரிந்து வைத்து உள்ளது.1
- கரூரில் ADMK வடக்கு பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா கரூர் மாவட்டம் அதிமுக வடக்கு பகுதி சார்பில் இன்று அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் மாவட்ட கழக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக வடக்குப் பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அருண் டெக்ஸ் தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணன் வடக்கு பகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மணி வார்டு செயலாளர்கள் சரவணன்.பிரபு. சுப்பிரமணி.மகாமுனி.. வடக்கு பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைராஜன் இந்தியன் கார்த்திக்.ராஜா.மகேஷ்.பெரியசாமி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்1
- கம்பம் அருகே கூடலூரில் மோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர் கூடலூர் அருகே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்தனர். இன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பாரதப் பபிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை பாரதியார் ஜனதா கட்சியினர் நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவரஜா ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விழாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி பணிகளையும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி இனிப்புகளை வழங்கி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தளித்து மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . பேட்டி: ராஜபாண்டி தேனி மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி2
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் பானுமதி தாக்கல் செய்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் அதிமுகவில் இருந்து பல பதவிகளை பெற்று பலனடைந்து விட்டு இன்று மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் விளைவிக்கும் வகையில் தவெகவில் இணைந்ததாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இன்று ஒவ்வொரு இல்லத்திலும் உள்ளது எனவும். அதிமுக ஆட்சிக்காலங்களில் செய்த சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பதாக கூறினார். மேலும் மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறுகையில் கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செய்த சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பதாக கூறினார். தற்போது அதிமுக வேட்பாளராக களம் காணும் பானுமதி மக்களிடையே நன்மதிப்பையும் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையும் உள்ளது எனவும் கூறினார். மேலும் தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும் எனவும் கூறினார்.1