05.01.2026_ADP_INTERNATIONAL KICK BOXING சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்ட மாணவர்கள் சர்வதேச கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளிகளில் படிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தினர் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச கிக்பாக்சிங் போட்டிகள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள இந்திராகாந்த உள் விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 4ம்தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த மூன்று வருடங்களாக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.இதில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று அதையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் என தனித்தனியாக வெற்றி பெற்றதற்கான மதிப்பெண் புள்ளிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட்டது.அந்த தரவரிசை பட்டியலில் சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.குறிப்பாக சீனியர் பிரிவு, ஜூனியர் பிரிவு, சப் ஜூனியர் பிரிவு என மூன்று பிரிவுகளில் யாழினி, சம்சிதா , கிருபா ஸ்ரீ , வசுமதி , ரீகாஸ்ரீ , சபரிஸ் ஆகிய ஆறு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டியில் உள்ள கிக்பாக்ஸிங் உள் அரங்க கூடத்தில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் துரைமுருகன் தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.இந்நிலையில் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வான கிராமப்புற ஆறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேனி மாவட்ட கிக்பாக்சிங் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.இதில் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களை தேனிமாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்ட சங்கத்தினர் பாராட்டு தெரிவித்து போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

- பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- நாம் வாங்கும் காலண்டர் எவ்வளவு பேர் உழைப்பில் எவ்வாறு உருவாகிறது என்று பாருங்கள்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்ப கவுண்டம் பாளையம்பகுதியில் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து 30 பேர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு லேசான காயம்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை* விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் சாலையில் சாய்ந்தது. எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செலம்பகவுண்டம்பாளையம் அருகில் TN 01 Y 3448 என்ற எண் கொண்ட விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் செலம்பகவுண்டம்பாளையம் அருகில் வரும்போது வாகனத்தில் பட்டைஎதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாகஉடைந்து போனதால் வண்டி ரோட்டிலேயே வலது புறமாக சாய்ந்து விட்டது. நல்வாய்ப்பாக பின் பகுதியில் எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக வரும் என்று வாகனம் பழுதானதால் மாற்று வாகனமாக வந்த வாகனம் பட்டை உடைந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் 30 பள்ளி குழந்தைகள் சென்றதில் 5 ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு வையப்பமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பினார்கள்.சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.1
- *தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.1
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- ஆலங்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு (VIDEO) பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் பனிப் பொழிவுடன் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடும் பனி நிலவியதால் அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையை மறைத்தவாறு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்புவிளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.1