logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…

21 hrs ago
user_சதிஷ் குமார்
சதிஷ் குமார்
கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
21 hrs ago

*பாலவிடுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் சாலை மறியல் | BREAKING NEWS | IHRPC NEWS* கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தற்போது திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தகவல் கேட்டும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாலவிடுதி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும்…

More news from தமிழ்நாடு and nearby areas
  • தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    1
    தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை
கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • அன்னவாசல் பகுதிகளில் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம்  தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வருகின்ற செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது இதற்காக அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல், மதியநல்லூர், அன்னவாசல், இலுப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி,  உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் இன்று நடந்தது இதில் அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    அன்னவாசல் பகுதிகளில்
6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் 
தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வருகின்ற செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது இதற்காக அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல், மதியநல்லூர், அன்னவாசல், இலுப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி,  உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் இன்று நடந்தது 
இதில் அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.
    1
    சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ரெட்டியார்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது.
இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும்  நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழாவாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழாவாக விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    5 hrs ago
  • அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    1
    அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கரூரில் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வங்கித்துறையில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கித்துறையில் ஐந்து நாள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான மற்றும் பாகுபாடு காட்டும் PLI திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே ஒப்புக்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வங்கியில் உள்ள தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
    1
    கரூரில் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு  சார்பில் வங்கித்துறையில் 5 நாள் வேலை முறையை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வங்கித்துறையில் ஐந்து நாள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான மற்றும் பாகுபாடு காட்டும் PLI திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
நிலுவையில் உள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
வங்கியில் உள்ள தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள்  பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள்  பாம்புகள் புகுந்தது தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலுக்கு பின்னர் பாம்புகள் சிக்காததால் பரபரப்பு அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியர் பாம்புகள் செல்வதை கண்டுள்ளார் பின்னர் அந்த பாம்புகள் வகுப்பறைக்குள் உள்ள ஆய்வக அறைக்குள்  செல்வதை  கண்டுள்ளார். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் ஒவ்வொரு இடத்தையும் சோதனை செய்தனர் இதில் பாம்புகள் எதுவும் சிக்கவில்லை. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடமாகும் இந்த கட்டிடத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வாகமும் செயல்பட்டு வருகிறது இந்த ஆய்வகத்தில் உள்ள கல் மேஜைகள் பழுதடைந்து மற்றும் ஆய்வுகள் செய்யும்போது வெளியாகும் கழிவுநீர்கள் செல்லும் வழி அமைப்புகள் முறையாக பராமரிக்காததால் இந்த அமைப்பு சேதப்பட்டு உள்ளது. இதன் வழியே பாம்புகள் வெளியேறிருக்கலாம் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்
    1
    அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள்  பாம்புகள் புகுந்ததால் பரபரப்பு
அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள்  பாம்புகள் புகுந்தது தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலுக்கு பின்னர் பாம்புகள் சிக்காததால் பரபரப்பு 
அன்னவாசல் அரசுமேல்நிலைப் பள்ளியில் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியர்  பாம்புகள் செல்வதை கண்டுள்ளார் பின்னர் அந்த பாம்புகள் வகுப்பறைக்குள் உள்ள ஆய்வக அறைக்குள்  செல்வதை  கண்டுள்ளார். 
இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்  இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தார் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் ஒவ்வொரு இடத்தையும் சோதனை செய்தனர் இதில் பாம்புகள் எதுவும் சிக்கவில்லை. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் கடந்த  30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடமாகும் இந்த கட்டிடத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வாகமும் செயல்பட்டு வருகிறது  இந்த ஆய்வகத்தில் உள்ள கல் மேஜைகள் பழுதடைந்து மற்றும் ஆய்வுகள் செய்யும்போது வெளியாகும் கழிவுநீர்கள் செல்லும் வழி அமைப்புகள் முறையாக பராமரிக்காததால் இந்த அமைப்பு சேதப்பட்டு உள்ளது. 
இதன் வழியே பாம்புகள் வெளியேறிருக்கலாம் என தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    1
    திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறனர்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.