Shuru
Apke Nagar Ki App…
சின்ன கண்ணன்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by சின்ன கண்ணன்2
- மக்கள் சமூக நீதி பேரவை, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு குழு இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக வேப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13.01.2026 அன்று நடந்தது. குரும்பகவுண்டர் சமூகத்தையும், அதன் தலைவர் R.கிருஷ்ணசாமியையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் Whatsapp-Audio பதிவினை வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், இரு சமூகங்களுக்கு மத்தியில் கலவரத்தை தூண்டிய குற்றசெயலுக்காக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி 10 மேற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால், கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கும். நடவடிக்கை இல்லை என்பதால், வேப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைமையாக மக்கள் சமூகநீதிபேரவை மாவட்ட செயலாளர் பிரபு. முன்னிலையாக மாநில செய்தி தொடர்பாளர் சந்திரசேகர், அயலக அணி தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர் கோபால், மாநில பொருளாளர் சுமதி, கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர் பிச்சைவேல், ஒன்றிய செயலாளர் அஜய் மற்றும் கடலும் மாவட்ட குரும்பகவுண்டர் சமூக நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.3
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை. 82 வயதான இவர் தொடர்ந்து 12வது ஆண்டாக தனது அன்பு மகளுக்கு பொங்கல் சீரை சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே கொண்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் பழக்கமாக உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதியருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக வழங்கி வந்த செல்லத்துரை மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தலையில் கரும்பு கட்டும், சைக்கில் கேரியரில் சீர் பொருட்க்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சுமார் 17 கிமீ பயணம் செய்து பொங்கல் சீர் வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்கிளிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு முதியவருக்கு கைகளை காட்டி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.1
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் மட்டி, ரசகதளி மற்றும் செவ்வாழை வாழைப்பழங்கள் வரத்து குறைவு காரணமாக, கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது மண தம்பதியர்களுக்கு சீர்வரிசையுடன் வாழை குலைகளும் கொடுப்பது வழக்கம் அதே போன்று அனைத்து பொங்கல் விழாவிலும் வாழை குலைகள் இடம் பெறும் இதனால் பொங்கல் பண்டிகைக்கு வாழைக்குலைகளின் தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளது இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சந்தைகளில் 100 எண்ணம் கொண்ட பெரிய செவ்வாழை பழம் ரூ 1500 ரூபாயாக விலை உயர்ந்து உள்ளது - 10 கிலோ எடை கொண்ட ரசகதளி பழம் 700 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட வெள்ளை தொழவன் பழம் 500 ரூபாயாகவும், 35 எண்ணம் கொண்ட நாட்டு ஏத்தன் பழம் 350 ரூபாயாகவும், 100 எண்ணம் கொண்ட நாட்டு பேயன் பழம் 700 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது அனைத்து வாழை பழங்களும் 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- உலகம் முழுவதும் நாளை மறு தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாட பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அந்தத் திருநாளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தற்போது கவலையில் ஆழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கரும்பு, பானை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரத்திற்காக சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆலங்குடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் வீட்டின் உள்ளையே முடங்கி இருக்கின்றனர். இதனால் வருடத்தில் ஒரு நாளை நம்பி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் பொதுமக்களின் வருகை இன்றி விற்பனைக்காக வாங்கி வைத்த பொருட்கள் விற்பனையாகாமல் இருப்பதால் இந்த பொங்கல் தங்களுக்கு கசப்பு பொங்கலாக மாறிவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனர். மழை ஒரு காரணமாக அமைந்தாலும் இதில் முக்கிய காரணமாக இருப்பது பொதுமக்களின் நாகரீக மாற்றமே, தைப்பொங்கல் திருநாளில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக இருந்தாலும் பொதுமக்களின் மாற்றத்தால் எவர்சில்வர் பாத்திரங்களையே அதிகமாக விரும்புவதாகவும் மண்பானை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மண்பானை உற்பத்தியில் ஈடுபடும் தொழிளாலர்கள்உள்ளூரில் பானை செய்வதற்கு மூலப்பொருளான களிமண் பற்றாக்குறையாலும் ஒரு சில இடங்களில் முற்றிலும் களிமண் கிடைக்காத காரணத்தாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பல தங்களது தொழிலையே விட்டு விட்ட நிலையில் ஒரு சிலர் பணம் கொடுத்து களிமன்களை வாங்கி பானைகள் செய்து வருகின்றனர். இன்னும் சில மண்பான தொழிலாளர்கள் மண்பாண்டம் செய்வதை விட்டாலும் மண்பாண்டங்களை விலை கொடுத்து வாங்கி வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு சிரமத்திற்கு இடயே மண்பான தொழிலாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்தாலும் பொதுமக்கள் மண்பாண்டங்களில் வாங்குவதில் ஆர்வம் காட்டாததாலும் காரணத்தாலும் மண்பாண்ட வியாபாரிகள் தங்கள் கொண்டு வந்த பாணிகளை விற்பனை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தை திருநாளில் பொதுமக்களுக்கு கரும்பு, பொங்கல், கொண்டாட்டம் என ஏராளமான தித்திப்புக்கள் இருக்கும் நிலையில் அந்த தித்திப்பான பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண்பானையில் வைத்து கொண்டாடினால் லட்சக்கணக்கான மாண்பாண்ட தொழிளாலர்கள் வாழ்வும் தித்திப்பாக மறும் என்பதே மண்பாண்ட தொழிளாலர்களின் கோரிக்கையாக உள்ளது.1