logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதிய டைட்டில் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் பண்ணை கிராமத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

5 hrs ago
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
5 hrs ago
2afcca39-2f47-493d-9937-981396bdaabd

புதிய டைட்டில் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் பண்ணை கிராமத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 36.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்,
உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில்   விவாதிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்
    1
    தஞ்சாவூர் மாவட்டம் 
பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள்  இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    Electrician Pattukkottai, Thanjavur•
    15 hrs ago
  • அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
    2
    அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்.
மதுரை, மார். 11-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது.
பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள் :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர்.
மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    2
    திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திடக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் உயிரிழந்தநிலையில், வாரிசு சான்றுக்காக பிப்.26-ம் தேதி திடக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை (47) அணுகினார். சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனைபடி, ரசாயன தடவிய பணத்தை நீதிமன்றம் அருகே உள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சுதாகரிடம் ராஜா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் சுதாகரை கைது செய்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திடக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் உயிரிழந்தநிலையில், வாரிசு சான்றுக்காக பிப்.26-ம் தேதி திடக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை (47) அணுகினார். சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
போலீஸாரின் ஆலோசனைபடி, ரசாயன  தடவிய பணத்தை  நீதிமன்றம் அருகே உள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சுதாகரிடம் ராஜா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் சுதாகரை கைது செய்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.