Shuru
Apke Nagar Ki App…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார்.
AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள் தொகுப்பு, திராவிட இயக்கமும் சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்கச் சிறுகதைகள்-2 தொகுப்புகள் ஆகிய திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை வெளியிட்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நெற்றியில் நாமமிட்டு, திருவோடு ஏந்தி நூதன முறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ஆந்திராவில் வழங்குவதைப்போல் தமிழ்நாட்டிலும் உதவித்தொகை உயர்த்தி வழங்கிட கோரி , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாற்று திறனாளிகள், நெற்றியில் நாமமிட்டு, திருவோடு ஏந்தி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். _________ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜி அவர்களின் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நெற்றியில் பட்டை நாமம் இட்டு, திருவோடை கையில் ஏந்தி நூதன முறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தற்போது சாதாரண ஊனமுற்றோருக்கு 'வருவாய் துறை' மூலம் ரூ.1,500/- ம், கடும் ஊனமுற்றோருக்கு 'மாற்றுத்திறனாளிகள் துறை' மூலம் ரூ.2,000/-மும் உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இது தற்போதைய விலைவாசி அடிப்படையில் எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாதாந்திர உதவித்தொகையை, அண்டை மாநிலமான ஆந்திரா, மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ரூ.6,000/-, ரூ.10,000/-, ரூ.15,000/- என மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர ஊக்க தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்று திறனாளிகள் சங்கத்தின் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி தாய்-தந்தை இறந்துவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை அரசு உதவ கோரிக்கை வைத்தனர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார். இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்1
- கிருஷ்ணகிரி - தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. ---------------------------------------------------------------- ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாட்களை அனுசரிக்க துவங்குகிறார்கள். அதேபோன்று, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அவர்கள் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு, தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங்கினார்கள். தவக்காலத்தை அனுசரிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு, இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்வ மக்கள் பங்கேற்று சாம்பல் விபூதி பூசிக்கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே பாஜக பட்டியலின அணி சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது, இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து பட்டியல அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மகளிர் அணி தலைவிகளான சிலம்பொழி, சரண்யா, விமலா உட்பட பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கிருஷ்ணகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- காஞ்சிபுரம் புத்த விகாரில் காகம் ஒன்று அமைதியாக தியானம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தனர். இந்த இடத்தில் ஒரு காகம் ஒன்று ஆட்கள் அதிகமாக உள்ள புத்த விகாரில் மேசைக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதை அருகே இருந்த பொது மக்கள் மற்றும் புத்த பிச்சுகள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.1
- காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட கழகத்தினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வணங்கினர். ---------------------------------------------------- தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் வருகின்ற 24 ம் நடைபெற உள்ளது . அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது. கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமான. புகழ்பெற்ற இத் திருக்கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டியும், முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் மாவட்ட வெள்ளித்தேர் அலங்கரிக்கப்பட்டு தங்க நிற பட்டாடை உடுத்தி கந்தக்கோட்ட முருகன், அரக்கு நிற பட்டாடை உடுத்தி வள்ளி- தெய்வானை சமேதராக முருகர் வெள்ளித் தேரில் எழுந்தருளினார் . வெள்ளி தேரை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர் . இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு வெள்ளி தேரை வடம் பிடித்து உள்பிரகாரத்தில் இழுத்து வந்தனர். பொதுமக்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் கூடி இருந்த பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ,மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெள்ளி தேர் பவனி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோசத்துடன் வெள்ளி தேரை வடம்பிடித்து கோவில் உட்பிரகாரத்தில் இழுத்து வந்தனர்.1
- Post by Vinayagam Vinayagam1