கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் கலசத்தில் இடி விழுந்து கலசம் சேதமடைந்து விழுந்ததால் பரபரப்பு. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, கஞ்சனூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது. திருக்கோயில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில். சுமார் 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருப்பதாகவும் தினசரி பூஜைகள் நடந்து வந்தாலும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென்று கடுமையான இடி இடித்ததில் மின்னல் வெளிச்சத்தோடு கோயிலின் மூலவ விமானத்தை இடி தாக்கியது. இதனால் கோயிலின் விமான கலசம் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் இடி விமானத்தை தாக்கியதால் கோயிலில் மின்சார விளக்குகள் மற்றும் மெயின் மின்சார சாதன பொருட்களில் மின் கசிவு ஏற்பட்டு கோயிலின் மூலவ சன்னதியில் முழுவதுமாக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கலசத்தை எடுத்து கோயிலில் உள்ளே வைத்தனர். இது குறித்து இந்த சமய அறநிலையத் துறை மற்றும் திருப்பனந்தாள் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்சனூர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் இடி விழுந்து விமானம் இடிந்த நிகழ்வு பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

- குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.1
- தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்1
- தொட்டியத்தில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் கொண்டு வருவதாக தெரிவித்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க முப்பெரும் விழாவில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம்எல்ஏ விக்னேஷ் பேசுகையில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் முசிறி தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து சேர்ப்பது கொடுத்து தீவிர ஆலோசனை செய்து உள்ளதாகவும் 5 வருடங்களில் பல்வேறு திட்ட பணிகளை செய்து முடிப்பதாகவும் தெரிவித்தனர் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் நடைபெற்றது. பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் சிவன் கோயில் திடலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய ஊர்வலத்தில் விழாக்குழு விநாயகருடன், நகரில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாட்டுக்கல், வலையபட்டி, புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து அமரகண்டான் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.1
- முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.1
- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்1
- தொட்டியம் வழக்கறிஞர் சங்க விழாவில் சங்கத் தலைவர் கார்த்திக் முசிறி எம்எல்ஏ வை விக்னேஷிடம் புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டி தர கோரிக்கை வைத்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது விழாவில் பேசிய சங்கத் தலைவர் கார்த்தி முசிறி எம்எல்ஏ விக்னேஷிடம் நீதிமன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர் நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1