logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தொட்டியத்தில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் கொண்டு வருவதாக தெரிவித்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க முப்பெரும் விழாவில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம்எல்ஏ விக்னேஷ் பேசுகையில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் முசிறி தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து சேர்ப்பது கொடுத்து தீவிர ஆலோசனை செய்து உள்ளதாகவும் 5 வருடங்களில் பல்வேறு திட்ட பணிகளை செய்து முடிப்பதாகவும் தெரிவித்தனர் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

4 hrs ago
user_Kumar reports musiri
Kumar reports musiri
Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
4 hrs ago

தொட்டியத்தில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகள் கொண்டு வருவதாக தெரிவித்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க முப்பெரும் விழாவில் முசிறி எம்எல்ஏ விக்னேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் எம்எல்ஏ விக்னேஷ் பேசுகையில் புதிய நீதிமன்ற கட்டிடம் மற்றும் முசிறி தொகுதி முழுவதும் பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்து சேர்ப்பது கொடுத்து தீவிர ஆலோசனை செய்து உள்ளதாகவும் 5 வருடங்களில் பல்வேறு திட்ட பணிகளை செய்து முடிப்பதாகவும் தெரிவித்தனர் நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் ​திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ​சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ​சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ​போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ​சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
​திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
​சம்பவத்தின் பின்னணி:
மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
​சாலை மறியல் போராட்டம்:
விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை
இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
​சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    1
    குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும்  பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம்,  அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில்  கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு .....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் 
கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர்.
இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    1
    முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் 81 வது பிறந்தநாள் விழா பொன்னமராவதியில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பொறியாளர் பழனியப்பன் தலைமையில் பொன்னமராவதி உடையாபுராட்டியம்மன் கோவிலில் ப.சிதம்பரம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவர் உயர் பதவிகளுக்கு வந்து மக்கள் சேவையாற்ற வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    1
    தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
    1
    சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கொட்டித்தீர்த்த கனமழைஸ்டேட் பேங்க் காலனியில் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் மக்கள் அவதி. கரூர் மாவட்டத்தில் இன்று நேற்று இரவு காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்லவும் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை பொதுமக்கள் வெளியேற்றினர். மேலும், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் மழைநீர் அதிகளவில் தேங்குவதாகவும், நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்தி, நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கொட்டித்தீர்த்த கனமழைஸ்டேட் பேங்க் காலனியில் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் மக்கள் அவதி.
கரூர் மாவட்டத்தில் இன்று நேற்று இரவு காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு நேரத்தில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்பு சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்லவும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை பொதுமக்கள் வெளியேற்றினர்.
மேலும், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் மழைநீர் அதிகளவில் தேங்குவதாகவும், நீண்ட நேரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்தி, நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.
    1
    கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில்  கலந்து கொண்டனர்.
    user_Rakesh sharma
    Rakesh sharma
    லால்குடி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.