Shuru
Apke Nagar Ki App…
கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
King
கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது இதில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமை வகித்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்1
- மதசார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணியின், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சு. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து மானூர் மேற்கு ஒன்றியம் தெற்குப்பட்டி, சீதைக்குறிச்சி, குறிச்சிகுளம், மேல கலக்குடி, கீழ கலக்குடி , திருமலாபுரம் , அயுப்கான்புரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் முன்னாள் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகப் பொறுப்பாளர் உயர்திரு.TPM.மைதீன்கான் அவர்கள் தலைமையில் கிராம பொதுமக்கள் கழக உடன்பிறப்புகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது . இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ALS லட்சுமணன் Ex-MLA , மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் S.V.சுரேஷ், கிரிஜா குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, மாநகர துணை செயலாளர் V.S. அப்துல் கையூம் மதிமுக செயற்குழு உறுப்பினர் மின்னல் முகமது அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லி . முகம்மது மீரான் மைதீன், கோ.மிக்கேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தொப்பி I மைதீன், மாவட்ட விவசாய அணி தலைவர் போத்திக்கண்ணு,மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குறிச்சிகுளம் சித்திக் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சூச்சர், பேரங்காடி ஐயப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டார தலைவர் அருள் ராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க அவை தலைவர் , தங்கராஜ் மதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் J J வேத பாண்டியன், மருதம் வர்த்தக நல பொருளாளர் பாலசுப்பிரமணியம், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் திரளானோர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய போது.1
- Post by மா.கணேஷ்1
- தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.1
- (8-4-2026) புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் நெல்லையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி ரோடு ஷோ வில் கலந்த கொள்ள வந்த விஜய்க்கு தூத்துக்குடியில் சில கிலோமீட்டர் தூரம் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர் விஜயின் வாகனம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது விஜய் மக்களை பார்த்து தவெக கொடியை அசைத்தவாறு மக்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.1
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் பேசியதாவது; வருகின்ற 15ம் தேதி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். மேலும், பேசிய அவர் பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அவரது Ex.அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். பல ED வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ளன. இதை எடுத்து விடுவோம் என்று அவர் பயப்படுகிறார் என்றார்.1
- *பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி* *அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும்* *தேனியில் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சனம் செய்து பேச்சு* பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளரை ஆதரித்து தேனியில் விசிகா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது பெரியகுளம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார் சிறுத்தை குட்டி எதிர் நீச்சல் அடித்து கரை ஏறுமா? என்று சோதனை முயற்சியாக பெரியகுளம் தொகுதி நமக்கு வழங்கப்பட்டுள்ளது 25 ஆண்டுகளுக்கு பிறகு தென் மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின் 2006 ஆம் ஆண்டு பொது தொகுதியாக இருக்கும் போது இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்துள்ளேன், தற்போது தனி தொகுதியாக மாறி உள்ளது நமது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் ஓ.பன்னீர்செல்வமும், தங்கதமிழ்செல்வனும் பெரியகுளம் தொகுதி வேட்பாளர் சக்திவேலை வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதிமுக மட்டும் தனித்து நிற்கவில்லை அவர்கள் பாஜகவினரை தோளில் சுமந்து வருகின்றனர் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு செலுத்தும் வாக்கு பாஜக நம்மைப் போல் சராசரியான அரசியல் கட்சி இல்லை அவர்கள் சாதி வெறி, மத வெறியை தூண்டுகிற கட்சி, வெறுப்பு அரசியலை தூண்டுகிற கட்சி தமிழர்களையும், தமிழகத்தையும் மதிக்காத கட்சி என்று விமர்சனம் செய்தார் அதிமுகவிற்கு வாக்கு செலுத்தி அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் பாஜகவினர் தான் முதலமைச்சராக வரும் நிலை உருவாகும் பாஜகவை எதிர்த்து தான் திமுக தலைமையிலான இந்த கூட்டணி போட்டியிடுகிறது மீண்டும் திமுக 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் அதில் விசிக எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்1
- தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது1