Shuru
Apke Nagar Ki App…
இரவில் பெய்த கனமழை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் களத்தில் இறங்கி எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மழைநீரானது குளம் போல் தேங்கியது இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஆணையருடன் நேரடியாக சென்று சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்
Nivetha
இரவில் பெய்த கனமழை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் களத்தில் இறங்கி எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் மழைநீரானது குளம் போல் தேங்கியது இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஆணையருடன் நேரடியாக சென்று சாலையில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வார நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்
More news from தமிழ்நாடு and nearby areas
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்1
- அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள் நிலைமை என்ன1
- சேலத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் மாவட்ட திமுகவின் தொ மு ச சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, சேலம் ஸ்டேட் தலைமை வங்கி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலத்தில் குடிநீரை தனியாருக்கு தாரை வார்த்த தமிழக அரசு தன் முடிவை திரும்ப பெற வேண்டும், 200 மாணவர் அரசு விடுதிகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை கைவிட வேண்டும், மாநில உரிமைகளை பறிக்ககூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் புவனகிரி அருகே 1 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம் லஞ்சக் குற்றச்சாட்டால் வீணாகும் நெல்மணிகள் விவசாயிகள் கண்ணீர் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் தங்கள் நெல்லை விற்க முடியாமல் காத்திருக்கின்றனர். நெல்மணிகளைக் கொள்முதல் நிலையத் தரையிலேயே கொட்டி வைத்து நீண்ட நாட்கள் காத்திருப்பதால், மழையில் நனைந்து முளைப்பயிராகவும், வெயிலின் தாக்கத்தால் கருமை நிறமாகவும் மாறி வீணாகி வருகின்றன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் விவசாயிகள், வரிசைப்படி நெல்லைக் கொள்முதல் செய்யாமல் லஞ்சம் கொடுப்பவர்களின் நெல்லை மட்டுமே முன்னுரிமை கொடுத்துக் கொள்முதல் செய்வதாகத் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு நேரங்களில் வியாபாரிகளின் நெல்லை ரகசியமாகக் கொள்முதல் செய்யும் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. நாளொன்றுக்கு 1,000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளிகளிலேயே பாதுகாப்பற்ற முறையில் தேக்கமடைந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்ணீருடன் காத்துக் கிடக்கும் நிலையில், அதிகாரிகளின் இந்த அலட்சியப்போக்கு உணவுத்துறை அமைச்சருக்குத் தெரியுமா அல்லது அவருக்குத் தவறான தகவல்கள் அனுப்பப்படுகிறதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாகக் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி தங்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.1
- பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது ஒன்றியம். ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளி, செப்டம்பர் 22/09/26 இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியற்க்கு காமராஜரின் காலை உணவு சிறப்பு விரிவாக்கத்தினை தொடங்கப்பட்டது, அதில் பள்ளியின் ஆசிரியர், திருமதி.காமாட்சி.P. ஆங்கிலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பங்கேற்று மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தி சிறப்பித்தார்.4
- காலை உணவு திட்டத்தை தொடங்க வைத்து மாணவனுடன் உணவு அருந்திய சட்டமன்ற உறுப்பினர் அரியலூர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மானவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ* *6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடக்கம்; மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ க.வைத்திலிங்கம்* தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜயால் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதியில் இன்று முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பாமக எம்எல்ஏ க.வைத்திலிங்கம் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இன்று முதல் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இதேபோல் அரியலூர் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மதுரை போன்று மீன்சுருட்டி, தாபமூர், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 2 லிட்டர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.1
- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகள் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டின் பேரில் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது ஆவணங்கள் கோப்புகள் கணக்கில் வராத பணம் உள்ளிட்டவைகள் குறித்து மாலை 5 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணம் பொருள் கணக்கில் வராத பணம் குறித்து இரவு 8:30 மணிக்கு மேல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.1
- ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... ராசிபுரம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி அலுவலகத்தின் முன்புற வாயில் கதவை பூட்டிய நிலையில், அலுவலகத்தில் இருந்த ஆணையாளர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் நகராட்சியில் அளவுக்கு அதிகமாக பணம் கைமாறுவதாகவும், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவும், நகராட்சி வரி உள்ளிட்ட பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.1