Shuru
Apke Nagar Ki App…
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாஞ்சோலை பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
Ambai Repoter
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாஞ்சோலை பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பூத் எண் 338ஏவி வாக்கு சாவடியில் இன்று காலை வாக்கு பதிவு நடைபெற்று 144 வாக்கு பதிவான நிலையில் வாக்கு பதிவு எந்திரம் திடீரென பழுதானது இதனால் வாக்களிக்க வந்த தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார் பின்னர் அதிகாரிகள் வந்து வேறு எந்திரங்களில் மாற்றி வாக்கு பதிவு தாமதமாக நடந்தது இதனால் பரபரப்பு ஏற்பட்டது1
- கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று தோவாளை அரசு பள்ளியில் தனது வாக்கைபதிவு செய்வதற்கு வருகை தந்தார். அப்போது அங்கு மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள் தம்பரசியும் தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187 பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. "நேர்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருமளவிலான தொகையைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்," என ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளிலும், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- மக்கள்_Vs_ஜனநாயகம் !!! மறவாதீர் ஓட்டு உங்கள் உரிமை !!! #publicintrest #publicresponse #election1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வாசுதேவநல்லூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வழக்கறிஞர்.ஈ.ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் கோமதி அம்பாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார்1
- கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெ. மகேஷ். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பூத் எண் 195-ல் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1