logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேர்தல் சோதனையில் ரூ. 2.36 கோடி ரொக்கம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்! தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187 பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. "நேர்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருமளவிலான தொகையைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்," என ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளிலும், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2 hrs ago
user_AMS MEDIA
AMS MEDIA
Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    2
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..
    user_Ambai Repoter
    Ambai Repoter
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக 
வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை  திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருக்கொடி ஊரைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருக்கொடி ஊரைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest
    1
    மானமும்_Vs_கட்சியும் !!! நல்லோர்க்கு இல்லை கட்சி கும்பிடுவோர்கே கட்சி !!! #politics #publicintrest
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    1
    உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    1
    தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த 
இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.