Shuru
Apke Nagar Ki App…
ஏழு மணி முதல் 8 மணி வரை மழை வையம்பட்டில் அய்யலூர் வரை மழை பெய்துள்ளது வையம்பட்டி முதல் அய்யலூர் வரை மழை பெய்து கொண்டுள்ளது
G.thangarasu
ஏழு மணி முதல் 8 மணி வரை மழை வையம்பட்டில் அய்யலூர் வரை மழை பெய்துள்ளது வையம்பட்டி முதல் அய்யலூர் வரை மழை பெய்து கொண்டுள்ளது
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் அவர்கள், இன்று தனது ஆதரவாளர்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள தேவாலயத்தில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஈஸ்டர் திருநாள் என்பதால், தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் கூடியிருந்தனர். வழிபாடு முடிந்து வெளியே வந்த பொதுமக்களிடம், வேட்பாளர் ஜக்கையன் அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் போதகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், தேவாலயத்திற்குள் சென்று இறைவனை வணங்கி ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1
- கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் கம்பம் மெட்டு ரோட்டில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். கம்பம் நகரத் தலைவர் தமீமுல் அன்சாரி தலைமையில் இந்நிகழ்ச்சி 4-4-2026 சனிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் சர்புதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் யாசர் அராபத் மற்றும் நிர்வாகிகள், திமுக வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சேட், திராவிட கழகம் மாவட்ட செயலாளர் செந்தில் குமார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏரியா குழு தலைவர் லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கல்யாண சுந்தரம், மதிமுக நகரச் செயலாளர் பஷீர் கான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தொண்டர் அணி செயலாளர் சாதிக், இளைஞர் அணி வடக்கு நகர அமைப்பாளர் கலில், காதர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலக திறப்பு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட துணைத் தலைவர் சலீம் பாட்ஷா, கம்பம் நகர தமுமுக செயலாளர் நிஜாத் அகமது, மமக செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் ஜெய்லானி மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹக்கீம், ஆசிக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளர் முன்னணியில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வைத்தனர். திமுக கூட்டணிக்கு வெற்றி பெற கடுமையாக உழைப்போம் வெற்றியில் மிக பெரிய வரலாற்று வெற்றியை திமுக பெறும் என வேட்பாளர் இராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார், மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் நியாஸ் அஹமது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி, கூடலூர் நகர தலைவர் சாகுல் அமீது, உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன், துணைச் செயலாளர் சையது அமீன் மற்றும் கம்பம் நிர்வாகிகள் சித்தீக், மெதார்ஷா, ஷேக் மைதீன், சையது அப்தாஹிர், சகுபர் சாதிக், ஹக்கீம், ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.3
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1
- *நான் இந்த தேர்தலில் சொந்த பந்தங்களின் வாக்குகளை வாங்கி,50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெறப்போகும் வெற்றியின் மூலம் வீட்டு கதவை திறக்காமல் ஒரு வாரத்திற்கு உன்னை வீட்டிற்குளேயே முடங்க வைப்பேன் என்றும்’* *ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் மகாராஜனுக்கு சவால் விடும் வகையில் அனல் பறக்கும் பேச்சு* *தனது அப்பா காலத்தில் ஒன்றாக வீட்டில் இருந்தபோது அவருக்காக நான் விட்டுக் கொடுத்தவன், ஆனால் இரண்டு முறை எம்எல்ஏவாக அவர் இருந்தும் இந்த முறை முதலில் வேட்பாளராக எனது பெயர் அறிவிக்கபட்டும் அவர் விட்டு கொடுத்தாரா எனவும், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைந்துவிடும், ஆனால் இரட்டை இலை எப்போதும் மறையாது என்றும் பேச்சு* தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள லோகிராஜன், இன்று ஆண்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் சிலுக்குவார்பட்டி பகுதியில் பிரச்சாரத்தின் போது லோகிராஜன் அண்ணனும் தற்போதைய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ-வுமான மகாராஜனை குறி வைத்து ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார் குடும்ப உறவுகளையும் அரசியலையும் பிரித்து, அண்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் பேசியதாவது: “நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள். என் தந்தை காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் நான் தீவிரமாக இருந்தேன். அப்போதே எனது அண்ணனுக்காக விட்டு கொடுத்து நான் தனியாக சென்று விட்டேன் ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் நான் தம்பி என்ற பாசம் அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது “ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்துவிட்டாய். இந்த முறை அதிமுகவில் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டது என் பெயர் தான் இப்போதும் எதற்காக நீ போட்டி போடுகிறாய். உனக்கு தம்பி மீது பாசம் இருந்தால், இந்த முறை எனக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா உன்னை விடமாட்டேன். வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். மக்கள் அளிக்கும் அடியால், தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரம் நீ வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கதவு மூடப்பட்டு வீட்டிற்குள் முடங்க வைப்பேன் என பேசினார்” பிரச்சாரத்தின் போது வழிநெடுகிலும் பெண்கள் லோகிராஜனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்1
- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் மாலை வேளைகளில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்ற வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இன்று ஏப்.5) காலை தேரோட்டம் கிரிவலப் பாதையில் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1