Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரியில் பரி வேட்டைக்கு பகவதி அம்மன் புறப்பட்டு சென்றார் நவராத்திரி விழாவில் யொட்டி நேற்று ஆயுத பூஜையும் இன்று விஜயதசமியும் நடைபெறுகிறது.இதனை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாராசுரன் அரக்கனை வதம் செய்வதற்காக விரதம் மேற் கொண்ட அம்மன் இன்று அரக்கனை வதம் செய்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.அம்மனுக்கு திருக்கண் சாத்தி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.போலீஸ் மரியாதை இடம் அம்மன் புறப்பட்டார். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் விவேகானந்தபுரம் சுவாமிநாதபுரம் பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சென்று அரக்கனை வதனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
Nagercoil News Bureau
கன்னியாகுமரியில் பரி வேட்டைக்கு பகவதி அம்மன் புறப்பட்டு சென்றார் நவராத்திரி விழாவில் யொட்டி நேற்று ஆயுத பூஜையும் இன்று விஜயதசமியும் நடைபெறுகிறது.இதனை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாராசுரன் அரக்கனை வதம் செய்வதற்காக விரதம் மேற் கொண்ட அம்மன் இன்று அரக்கனை வதம் செய்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.அம்மனுக்கு திருக்கண் சாத்தி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.போலீஸ் மரியாதை இடம் அம்மன் புறப்பட்டார். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் விவேகானந்தபுரம் சுவாமிநாதபுரம் பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சென்று அரக்கனை வதனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை.. கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..1
- விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகநேரி கே ஆர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உற்சாக வரவேற்பு கொடுத்த ஆட்டோ ஓட்டு உறுப்பினர்கள் சங்கங்கள்1
- தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் மரியாதை தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காவல் நிலையத்தில் இன்று (21.10.2026) காவலர் வீர வணக்க நாள் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் தலைமையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீரமரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் எஸ்.பி திரு. ரா. சிவ பிரசாத் அவர்கள் தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ---1
- தூத்துக்குடி மாவட்டத்தில் மழை விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்1
- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்1
- கன்னியாகுமரியில் பரி வேட்டைக்கு பகவதி அம்மன் புறப்பட்டு சென்றார் நவராத்திரி விழாவில் யொட்டி நேற்று ஆயுத பூஜையும் இன்று விஜயதசமியும் நடைபெறுகிறது.இதனை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாராசுரன் அரக்கனை வதம் செய்வதற்காக விரதம் மேற் கொண்ட அம்மன் இன்று அரக்கனை வதம் செய்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.அம்மனுக்கு திருக்கண் சாத்தி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.போலீஸ் மரியாதை இடம் அம்மன் புறப்பட்டார். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் விவேகானந்தபுரம் சுவாமிநாதபுரம் பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சென்று அரக்கனை வதனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது1