Shuru
Apke Nagar Ki App…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்தின் அருளவாடி கிராமத்திற்குள் இன்று பகல் நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். பகல் நேரத்திலேயே கிராமத்தின் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதியை ஒட்டியே உலா வருவதால் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sathees kumar
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்தின் அருளவாடி கிராமத்திற்குள் இன்று பகல் நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். பகல் நேரத்திலேயே கிராமத்தின் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதியை ஒட்டியே உலா வருவதால் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.1
- சேலத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அவர் தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.1
- தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.1
- பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் தருமபுரி ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. நேற்று மாலை சுமார் 7:15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்த இந்த ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து, புகையுடன் தீப்பொறிகள் பறந்து தீ எரிவதை சில பயணிகள் கவனித்தனர். உடனடியாக பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக் சக்கரத்துடன் ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக அதன் ரப்பர் பகுதி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. பயணிகளின் சாமர்த்தியத்தாலும், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையினாலும் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்ட பிறகே சேலம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி அடுத்துள்ள ஜீரகள்ளி வனச்சரகத்தின் அருளவாடி கிராமத்திற்குள் இன்று பகல் நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து உலா வந்ததால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். பகல் நேரத்திலேயே கிராமத்தின் அருகே காட்டு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானைகள் தொடர்ந்து கிராமப் பகுதியை ஒட்டியே உலா வருவதால் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கரூர் ஆட்டையாம்பரப்பு அருகே அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் ஒன்று, டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவ்வித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1