Shuru
Apke Nagar Ki App…
கரூர் ஆட்டையாம்பரப்பு அருகே அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் ஒன்று, டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவ்வித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
R. Suresh
கரூர் ஆட்டையாம்பரப்பு அருகே அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வந்த மினி வேன் ஒன்று, டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எவ்வித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலில் இன்று (27-07-26) ஸ்ரீபங்கஜவல்லித் தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப் பெருமாள் ஆடி ஜ்யேஷ்டாபிஷேகம் தங்க குடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவெள்ளறையை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, இந்த புனித நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.1
- தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், பதிவான மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டையில் 31 மி.மீ, திருமயத்தில் 16.2 மி.மீ, கரம்பக்குடியில் 2.6 மி.மீ, ஆலங்குடியில் 2 மி.மீ மற்றும் மழையூரில் 1.4 மி.மீ என மொத்தம் 53.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் தற்போது சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.1
- சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை ஒற்றை காட்டு யானை வழிமறித்து, தும்பிக்கையால் கரும்புகளை பறித்து ருசித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென சாலையில் வந்து நின்றதால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். லாரியை வழிமறித்த அந்த யானை அதில் இருந்த கரும்புகளை எடுத்துச் சாப்பிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வரும் சூழலில், பகல் நேரத்தில் சாலையில் காட்டு யானைகள் நடமாடி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.1