logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும் மதியம் உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.

5 hrs ago
user_Jil jolly Club
Jil jolly Club
அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
5 hrs ago

அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும் மதியம் உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் 
முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு   மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில்  மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி  மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • குற்றாலம் இன்று காலை நிலவரம் மிதமான சாரல் லேசான வெயில் இதமான காற்று சீராக விழும் தண்ணீர் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
    1
    குற்றாலம் இன்று காலை நிலவரம் மிதமான சாரல் லேசான வெயில் இதமான காற்று சீராக விழும் தண்ணீர் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
    1
    தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஓட்டப்பிடாரம் அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் 1997 ஆம் ஆண்டு எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மூலம் குடியிருப்பு மனை பட்டா வழங்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரன்லிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி இன்று வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நிலத்தை இங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அதனை மேச்சல் தரையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மோசடி பேர்வழிகளால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மோசடி செய்து மேற்கண்ட நிலத்தை தற்போது முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அந்த வழியாகத்தான் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் பைப் லைனும் செல்கிறது. அந்த பைப் லைனையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே மேற்கண்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்த நிலத்தை, எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி மேற்படி விவசாயிகள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்தி வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த மக்களுக்கே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வட்டாட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறினார்
    1
    ஓட்டப்பிடாரம் அருகே கால்நடை மேய்ச்சல்  நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக  வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி  ஊராட்சிக்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் 1997 ஆம் ஆண்டு எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மூலம் குடியிருப்பு மனை பட்டா வழங்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீரன்லிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த  மேய்ச்சல்  நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி இன்று  வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் கூறுகையில்,
ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள  நிலத்தை  இங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அதனை மேச்சல் தரையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மோசடி பேர்வழிகளால்  போலி ஆவணங்கள் மூலம்  பட்டா மோசடி செய்து மேற்கண்ட நிலத்தை தற்போது முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அந்த வழியாகத்தான் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் பைப் லைனும் செல்கிறது. அந்த பைப்  லைனையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே மேற்கண்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்த நிலத்தை, எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி  மேற்படி விவசாயிகள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்தி வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த மக்களுக்கே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வட்டாட்சியரும்  உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறினார்
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • கன்னியாகுமரியில் ஏற்பட்ட அரிய நிகழ்வு -மேகமூட்டத்தால் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மறைப்பு கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இவைகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் தெரிந்த போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை நன்கு தெரிந்த நிலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டது இதனால் இந்த இரண்டு நினைவகங்களும் மேகமூட்டத்திற்குள் மறைந்தது.இந்த அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த நிகழ்வு அதன் பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.மேகமூட்டம் மறைத்ததால் கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாத சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் மறைந்த பின் அவைகளை பார்த்து ரசித்தனர்.
    1
    கன்னியாகுமரியில் ஏற்பட்ட அரிய நிகழ்வு -மேகமூட்டத்தால் விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை மறைப்பு
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவைகளை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகில் சென்று இவைகளை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை சூரிய உதயம் தெரிந்த போது விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை நன்கு தெரிந்த நிலையில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டது இதனால் இந்த இரண்டு நினைவகங்களும் மேகமூட்டத்திற்குள் மறைந்தது.இந்த அரிய காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்தனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த நிகழ்வு அதன் பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.மேகமூட்டம் மறைத்ததால் கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண முடியாத சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டம் மறைந்த பின் அவைகளை பார்த்து ரசித்தனர்.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    4
    தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  
கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது,  ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார்.
உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது.  
இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். 
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். 
தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    1
    தூத்துக்குடி, ஆக.28
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது உலக சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகிறார்கள் அவர்கள் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை போன்றவைகளை பார்வையிடுவதுடன் பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்கள்.இன்று கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர் இதனால் கன்னியாகுமரி களைக்கட்டி உள்ளது.கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் சூரிய உதயம் காட்சியை நேரில் கண்டு களித்தனர்.அங்குள்ள காந்தி மண்டபம் காமராஜர் மணிமண்டபம் போன்றவைகளுக்கும் சென்று அவர்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்ததால் கன்னியாகுமரி களை கட்டியது
உலக சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகிறார்கள் அவர்கள் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை போன்றவைகளை பார்வையிடுவதுடன் பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்கள்.இன்று கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர் இதனால் கன்னியாகுமரி களைக்கட்டி உள்ளது.கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் சூரிய உதயம் காட்சியை நேரில் கண்டு களித்தனர்.அங்குள்ள காந்தி மண்டபம் காமராஜர் மணிமண்டபம் போன்றவைகளுக்கும் சென்று அவர்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது 🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்! 📍 தூத்துக்குடி | ஆக. 28 தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது
🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்!
📍 தூத்துக்குடி | ஆக. 28
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.