logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர்

4ae877e9-ba64-4dec-95f0-cc95854d0894

மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த

b06fc85b-54f4-4a0e-8438-e8c0e1f493d7

வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்பு தனபால் என்பவர் தகவல் கேட்டதில் தகவல் தராமல் இருந்த தகவல் அலுவலருக்கு ரூ 2000 அபராதம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்பு தனபால் என்பவர் தகவல் கேட்டதில் மாநகராட்சியின் பொதகவல் தகவல் அலுவலர் பாலச்சந்தர் என்பவர் தகவல் கொடுக்காமல் தன்னுடைய பணியை புறக்கணித்துள்ளார் மனுதாரர் மேல்முறையீடு செய்ததில் மாண்புமி தகவல் ஆணையம் வழக்கு எண் S A 16045 / F 2023 பொது தகவல் அலுவலர் பாலச்சந்தர் அவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளது இந்த அபராதத்தை மனுதாரருக்கு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது மாநகராட்சியின் பொது தகவல் அலுவலர் தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதாக தகவல் உள்ளது அபராதம் கட்டிய பொதுத் தகவல் அலுவலரான பாலச்சந்தர் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை சட்டம் பிரிவு 17 துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிய பொது தகவல் அலுவலர் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவ்வாறு செய்தால்தான் மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படாது என்று அன்பு தனபால் என்ற மனுதாரர் மாநில தகவல் ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
    1
    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்பு தனபால் என்பவர் தகவல் கேட்டதில் தகவல் தராமல் இருந்த தகவல் அலுவலருக்கு ரூ 2000 அபராதம்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அன்பு தனபால் என்பவர் தகவல் கேட்டதில் மாநகராட்சியின் பொதகவல் தகவல் அலுவலர் பாலச்சந்தர் என்பவர் தகவல் கொடுக்காமல் தன்னுடைய பணியை புறக்கணித்துள்ளார் மனுதாரர் மேல்முறையீடு செய்ததில் மாண்புமி தகவல் ஆணையம் வழக்கு எண் S A 16045 / F 2023 பொது தகவல் அலுவலர் பாலச்சந்தர் அவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளது இந்த அபராதத்தை மனுதாரருக்கு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது மாநகராட்சியின் பொது தகவல் அலுவலர் தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதாக தகவல் உள்ளது அபராதம் கட்டிய பொதுத் தகவல் அலுவலரான பாலச்சந்தர் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை சட்டம் பிரிவு 17 துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிய பொது தகவல் அலுவலர் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவ்வாறு செய்தால்தான் மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படாது என்று அன்பு தனபால் என்ற மனுதாரர் மாநில தகவல் ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    8 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
    1
    தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் 
முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு   மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில்  மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி  மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த -  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    1
    அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இன்று  காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்,
இந்த திருவிளக்கு பூஜையில்  திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ்  கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள்.
பூஜை முடிந்தவுடன்  வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    user_Jil jolly Club
    Jil jolly Club
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, 
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • தூத்துக்குடி சிவன் கோவிலில் பௌர்ணமி 108 மாவிளக்கு பூஜை தூத்துக்குடியில் புகழ்பெற்ற சிவாலயமாக சிவன் கோவில் உள்ளது. இங்கு பௌர்ணமியை முன்னிட்டு பௌர்ணமி மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு 108 மா விளக்கு ஏற்றி அம்மன் துதி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
    1
    தூத்துக்குடி சிவன் கோவிலில் பௌர்ணமி 108 மாவிளக்கு  பூஜை
தூத்துக்குடியில் புகழ்பெற்ற சிவாலயமாக சிவன் கோவில் உள்ளது. இங்கு பௌர்ணமியை முன்னிட்டு பௌர்ணமி மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு 108 மா விளக்கு ஏற்றி அம்மன் துதி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    1
    தூத்துக்குடி, ஆக.28
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது. இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும் மதியம் உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.
    1
    அய்யனார் குளம் துலங்கும்பதி அய்யா சுவாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள நெல்லை மாவட்டத்தின் தலைமை பதியாக விளங்கும் அய்யனார்குளம் துலங்கும்பதி துவரயம்பதி நாராயண சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதையொட்டி இன்று பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா சரண கோஷங்கள் முழங்க திருக்கொடி ஏற்றப்பட்டது.
இன்று தொடங்கிய விழாவானது வரும் 7 தேதி திருத்தேரோட்டத்துடன் நிறைவடையும். மேலும் விழா காலங்களில் நாள்தோறும்  மதியம்  உகப்படிப்பு உச்சிப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பத்து நாட்கள் அய்யா நாராயண சுவாமி நாகம்,அனுமன்,கருடன்,போன்ற வெவ்வேறு வாகனங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவார்கள்.
    user_Jil jolly Club
    Jil jolly Club
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.