Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
மா.கணேஷ்
தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர பழுதுநீக்கும் பணிகள் காரணமாக நாளை (மே 16) சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (16.05.2026) சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மின் நிறுத்தம் செய்யபடும் பகுதிகள் முத்தையாபுரம், தோப்புத்தெரு, வடக்குதெரு, பாரதிநகர், முள்ளகாடு,அத்திமரப்பட்டி,பொட்டல்காடு, அனல்மின்நகர் பகுதி, அபிராமிநகர், கேம்ப்,சுற்றியுள்ள பகுதிகள்,சுனாமிநகர், கேம்ப்,சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக, விரநாயக்கன் தட்டு. குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.1
- ஓட்டப்பிடாரம் அருகே கால்நடை மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் 1997 ஆம் ஆண்டு எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதி திராவிட நலத்துறை மூலம் குடியிருப்பு மனை பட்டா வழங்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீரன்லிங்கம் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி இன்று வீரன் சுந்தரலிங்கம்நகர் ஊர் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வீரன் சுந்தரலிங்கம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள நிலத்தை இங்குள்ள விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அதனை மேச்சல் தரையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு மோசடி பேர்வழிகளால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மோசடி செய்து மேற்கண்ட நிலத்தை தற்போது முள்வேலி அமைத்துள்ளனர். மேலும் அந்த வழியாகத்தான் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு குடிநீர் பைப் லைனும் செல்கிறது. அந்த பைப் லைனையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே மேற்கண்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்த நிலத்தை, எஸ்சி., எஸ்டி சட்டத்தின் படி மேற்படி விவசாயிகள் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்தி வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த மக்களுக்கே இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். வட்டாட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறினார்1
- தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.4
- தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது 🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்! 📍 தூத்துக்குடி | ஆக. 28 தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.1
- கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் .கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாப்பிஷேகத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின்னர் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், நித்திய பூஜையும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் பல்வேறு ஹோம்கள் நடை பெற்று கும்பகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டடன.பூஜைகளைதொடந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பட்டு கோயில் மூன்று முறை வலம் வந்து ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் விநாயகர் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பரிவாரமூர்த்தககளுக்கு மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது . இவ்விழாவில் திருக்குறுங்குடி ஜீயர் மடம்மடாதிபதி 50வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ பேரருளானராமானுஐ ஜீயர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்தருளி அனுக்ரஹ பாஷணம் செய்த அருளாசி வழங்கினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.4
- கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய குடிநீர் வாகனம் – மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்!1