logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

3 hrs ago
user_News
News
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
3 hrs ago

கோவில்பட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த - கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் நகரத்தின் அருகிலுள்ள கிராம பகுதிகளிலும் தெருநாய்கள் பொதுமக்களையும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் விரட்டி செல்வதும் கடிப்பதுமாக உள்ளது. ஏராளமானோர் நாய் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடைபெறுகிறது.நாய்கள் மற்றும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தர வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் தமிழரசன் தலைமையிலும் நிர்வாகி தவம் பாலாஜி முன்னிலையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு நகராட்சி பொறியாளர் சேர்மாக்கணியிடம் மனு வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், HMS வினோபா, ஆவல்நத்தம் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் மாநில துணை தலைவர் அபிராமி முருகன், நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிரிஸ்டோபர், ராமலட்சுமி, மணிமேகலை, மக்கள் நீதி மய்யம் கல்லூரணி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், INTUC ராஜசேகரன், திராவிடர் கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், பகத்சிங் இரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன், வேல்முருகன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புகுழு மேரிஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    1
    சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் 
இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு  Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    23 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார். உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    4
    தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளை சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  
கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது,  ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார்.
உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர், அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது.  
இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம். 
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார் அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். 
தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் மாந்கராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது 🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்! 📍 தூத்துக்குடி | ஆக. 28 தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது
🚨 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்!
📍 தூத்துக்குடி | ஆக. 28
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.
    1
    தூத்துக்குடி த வெ க போஸ்டர் விவகாரம் காங்கிரஸ் கட்சி பதிலடி
தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாளைய பிரதமர் விஜய் என்ற சுவரொட்டி நகர் முழுவதும் ஓட்டப்பட்டன. இது காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது பற்றி  செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி  இது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்கள் தங்கள் இறப்பை காட்டிக் கொள்வதற்காக செய்த முயற்சி என்று கூறினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை *தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தாமிரபரணி ஆற்றில்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை
*தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க புதிய தொழில்நுட்பம் பயண்பட்டுத்த திட்டம்.பத்தமடையில் சோதனை அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் 2 மாதங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான சோதனை இன்று நடைபெற்றது* 
தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 134 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த ஆற்றில் 58 இடங்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து ஆறு மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமும் ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு யூனிசென் என்ற தனியார் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின் வேதியியல் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான சோதனை செயல்விளக்கம் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் மையப்பகுதியில் நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயல்படுத்த பத்தமடை பேரூராட்சியை தேர்வு செய்துள்ளார். இதற்காக தனியார் நிறுவனத்தின் சொந்த பங்களிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கழிவுநீரில் உள்ள அமோனியல் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை குறைக்கும் வகையிலான சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, முதற்கட்டமாக ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் பத்தமடை பேரூராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக யூனிசென் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இன்று காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504 சுமங்கலி பெண்கள் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த திருவிளக்கு பூஜையில் திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள். பூஜை முடிந்தவுடன் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    1
    அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இன்று  காலையில் அம்பாசமுத்திரம் அகஸ்தியர் கோவிலில் வைத்து 504  சுமங்கலி பெண்கள்  பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்,
இந்த திருவிளக்கு பூஜையில்  திருநெல்வேலி யோகிராம் குடில் மாவட்ட செயலாளர் .T. V. சுரேஷ்  கலந்து கொண்டு சிறப்பு தீப ஆராதனை செய்தார் தொடர்ந்து பூஜை செய்த அன்னையர்களுக்கு முன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்கள்.
பூஜை முடிந்தவுடன்  வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிப்பட்டது.
    user_Jil jolly Club
    Jil jolly Club
    அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    1
    தூத்துக்குடி, ஆக.28
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் – மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 
அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். 
இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். 
இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். 
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 
இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    23 hrs ago
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் அவர்களின் நினைவு தினம் 
முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  H.வசந்தகுமார் அவர்களின் 6 ஆம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்க வைக்கப்பட்டது இந்தப் படத்திற்கு   மாநகர் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன் தலைமையில்  மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை அஞ்சலி செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி  மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தான், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.